அழாதே
…அம்மா…!
கருவறையிலிருந்து
ஒரு கடிதம்
தமிழ்மாமணி
ஹிதாயதுல்லாஹ்
============================== ====
அம்மா
….!
என்னை
கருவினில்
சுமப்பது
போதாதென்று
ஒயிரிலும்
சுமக்கும்,
உத்தமியே
….!
மண்காயப்
பொறுக்காத
மழைவானப்
புன்னகையே…!–இந்தப்
பிள்ளையின்
நிழல் கூட…….
முள்ளில்
விழத் தாங்காத பேரன்பே…!
படுத்திருக்கும்
என் பாசக் கடலே…!
உன்னுல்
இருந்துதான் பேசுகிறேன்…!
உன்
குதி விதையின்
குழந்தைப்
பூ
பேசுகிறேனம்மா
…!
அழுகிறாயாமே
…?
ஏனம்மா
…?
உன்
கண்ணீர்துளி பட்டு
என்
இதயமெல்லாம்
கொப்புளங்கள்
…!
அழாதே
…. அம்மா….!
அழாதே
…!
இன்ஷா
அல்லாஹ்
ஒரு
கருத்த இரவிலோ
நெருப்புப்
பகலிலோ
நிச்சயம்
வெளிவருவேன்…!
வலித்தால்
அழுவார்கள்
இது
வையக நியதி…!
ஆனால்
…நீ
பிரசவ
வலி வரவில்லையென்று
அழுகிறாயாமே
…!
பிரசவ
வலி
இல்லையென்றால்
..
ஒரு
கொடுமை
உடனே
ஆபரேஷன்
என்று
சிலமருத்துவர்கள்
அறிவித்துவிடுவார்கள்
…!
அதோடு
இருபத்தி
ஐய்யாரம் ரூபாய்
ரெடி
பண்ணி வை என்றும்
சொல்லி
விடுவார்கள்!
இவ்வளவு
தொகைக்கு
எங்கே
போவது?
என்ன
செய்வது என்று தானே
உனக்கு
வலி!
நான்
சுகமாய்
பிறக்க
வேண்டும்
அவ்வளவுதானே
….!
உன்
கண்ணீரைத்துடை…!
ஹக்கனை
நினை…!
இரண்டு
ரகா அத் தொழு…!
எல்லாமே
நலமாகும்…!
அழாதே
….அம்மா!
அழாதே
!
பூமிக்கு
நான் வந்து —உனக்குப்
புன்னகை
சேர்க்கிறேன்—உன்
பொழுதுகளில்
சோகம்
படராமல்
காக்கிறேன்…!
நேரம்
ஆகிறது!
கண்ணுறங்கப்
போகிறேன்!
நேசம்
வளர்ப்பவளே!
உன்னையென்
நெஜஞ்சிலே
சுமக்கிறேன்..!
இப்படிக்கு
உன்
கருவறையில் வளரும் உன் பிள்ளை,