முதல் கோப்பை

இலக்கியம் கவிதைகள் (All)

முதல் கோப்பை

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

                  தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

  • மதுவை குடிக்க

அவன் போனான் !

அவனைக் குடிக்க

அது தயாரானது !

 

  • போதையில் தள்ளாடி

இவன் நடு ரோட்டில் !

பேதை மனைவியவள்

வறுமையில் அல்லாடி வீட்டில்!

 

  • போதையில் குடிகாரன்

தன்னைப் பெற்ற அன்னையே அடிக்கிறான்!

போதை தலைக்கேறி

தான் பெற்ற மகள் முன்னே ஆடையின்றி நிற்கிறான் !

 

  • குடித்து விட்டு கார் ஓட்டியதால்

குடிக்கப்பட்ட உயிர்கள் கொஞ்சமல்ல!

குடித்து விட்டு அடித்து விட்டதால்

பிரிந்து விட்ட உறவுகள் கொஞ்சமல்ல!

 

  • மது மன நிம்மதி கொடுக்கிறது என

குடிப்பவன் நினைக்கிறான்!

அவன் மதியே அதில் போகிறதே

அதை ஏன் அவன் மறக்கிறான் !

 

  • குடிக்க ஆரம்பித்த போது

கவலை போனது

குடித்து முடித்த போனது

கல்லீறலே போனது !

 

  • இரவு விடுதிகளில் மேட்டுக்குடிகள்

கூத்து,குடி கும்மாளம்!

கூழ், கஞ்சிக்குக் கூட வழியின்றி

செத்து மடியும் மக்கள் ஏராளம் !

 

 

  • அரசின் மலிவு விலை மது விற்பனை,

குடியரசின் கருவூலம் நிரம்பியது

காந்தி நோட்டுகளால் !

வீட்டில் மனைவி மக்களுக்கு உணவில்லை

குடிகாரன் வீட்டை நிரப்பினான்

பிராந்தி பாட்டில்களால் !

 

  • பட்டை சாராயம் அடிக்க போன

குடிமகன்!

பட்டறைக்குப் போனான்

குடிகாரன் மகன் !

 

  • தண்ணி அடிக்கப் போன அப்பா

தனயனின் படிப்பு போனதப்பா!

 

  • தண்ணி அடிப்பவன்

தன்னைத்தானே அடித்துக் கொள்(ல்லு)கிறான் !

நண்பா உனக்கு நீ எதிரியல்ல!

உன்னையே நீ குடித்துக் கொல்ல வேண்டாம்!

 

 

 

  • “மது” அதன் முதல் கோப்பையில்

கவலையை மறந்தான் !

கடைசி கோப்பையில்

உயிர் துறந்தான் !

 

  • “மது”

முன்னூறு மில்லி என்றாலும்

முழு பாட்டில் என்றாலும்

அது ஓர் உயிர்க்கொல்லி!

வறிய மக்களுக்கு

அந்த பணத்தைக் கொடுங்கள்

வறுமை அகலும் சமூகத்தை விட்டும்

சற்றுத் தள்ளி!

v

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *