ஆதலினால் காதல் செய்யாதீர்
“நிஜத்தில் சுடும் நிஜங்கள்”
ப்ரியம் சொல்ல வந்தவனுக்கு…
உன் விருப்பத்தைக் கடிதமாய் வாசித்த வேளையில் என் மனசுக்குள்ளும் சில நூறு பட்டாம்பூச்சிகள்…
என்னைக் காதலிக்க… அதுவும் உயிருக்கு உயிராய் ஒரு ஜீவன்…!’ என்ற எண்ணம் வான உச்சியில் எனக்குச் சிறகு தந்து பறக்க வைத்தது.
ஆனால் எதார்த்தம் அது அள்்ள தோழனே…!
நிழலின் அருமை நிஜத்தில் சுடும்.
காதல் என்பதைச் சினிமாக்களும் கதைகளும் நமக்கு வேறு மாதிரி சொல்லித் தந்து்கொண்டிருக்கின்றன.
இந்த வயது, இந்தச் சூழல், ஹார்மோன்களின் உந்துதல் உன்னை இப்படிக் கடிதம்மெழுதத் தூண்டியிருக்கலாம். ஆசைப்படுவதும், அன்பு செலுத்துவதும் தவறில்லை.
ஆனால் வாழ்க்கை வெறும் பூஞ்சோலைகளாலும் நீரோடைகளாலும் மட்டுமே அமைந்துவிடவில்லை.சுடும் மணல்,கடும் குளிர்,முட்கள்,கற்கள்,காடும் கொடிய மிருகமும் நிறைந்த வாழ்க்கை இது.நான் என்பது நான் மட்டுமல்ல.
நான் எனது குடும்பத்தில் ஒருத்தி.குடும்பத்தின் பாரம் என் மீதும் சாய்ந்திரிக்கிறதோ.என் தந்தையின் ஓராயிரம் கனவுகளே என் உருவம்.
என் தாயின் ஏக்கங்களே என் மூச்சு.என் சகோதரிகளின் நம்பிக்கைகளால் பின்னப்பட்டவள் நான்.ஓர் உயர்ந்த சமுதாயத்தின் அடையாளம் நான்.
வாழ்வின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்ய வாழ்வையே விற்று விட என்னால் முடியாது.நீ என்பது நீ மட்டுமல்ல..என்னைப் போலவும் அல்லது என்னை விடவும் அதிகப் பொறுப்புமிக்கவன் நீ.
உயிர்த்துடிப்பு மிக்க மாணவ இளைஞர்களின் கைகளில்தான் நாளைய சமுதாயம் உருவாகக் காத்திருக்கிறது.
லட்சிய சமுதாயத்தின் கனவும் நம்பிக்கையும் நீ தான்.ஒரு சமூகபோராளி நீ! போட்டி நிறைந்த உலகில் உனக்கான களம் வேரானது.
அடர்காடே உனக்கு களமாயிருக்க ஒரு மரப்பொந்தில் கூடையைத் தூதனுப்பியிருக்காயே!நண்பனே…!
காதல்் என்பது மாயை.காதல் ஒரு கண்கட்டி வித்தை.
விழித்தெழு!உதறித்தள்ளு.லட்சிய வேட்க்கையுடன் உன் பயணம் தொடர்.திருமணம் வாழ்வின் அங்கம்.வயதும்,தகுதியும்,சூழலு
ஓராயிரம் மனங்களைக் காயப்படுத்தி அந்த மனங்களின் ரணங்களில் இன்புறுவதற்க்குப் பெயர்தான் காதலா?ஒருவரையொருவர் மனதார விரும்பும் இரு இதயங்களுக்காக எத்தனை எத்தனை இதயங்கள் நொறுங்கிப் போகின்றன.
உன் பயணத்தில் நான் எவ்வாறு இடையூறாய் அமைந்தேன்?உன்னை கவரும் படி நான் நடந்து கொண்டேனா?
மன்னித்து விடு தோழனே!
எனக்காகச் செத்துவிடுவதாய்க்கூட முட்டாள் தனமாக உளறியிருந்தாய்.
வாழ்க்கை என்பது சாவதற்க்காக அல்ல!வாழ்வதற்க்காக!விசாலமானது உலகு!உனக்காக வாழ்வு காத்திருக்கிறது.
காதல் என்ற கனவில் வாழ்வென்ற நிஜத்தைத் தொலைத்துவிடாதே!
அக்கறைவுடன்
உன் சகோதரி.
மாதமிருமுறை வெளிவரும் சமரசம் இதழில் வெளியான இந்த “அஞ்சல் செய்யாத கடிதம்”பக்கம் மிகவும் பயணுள்ள கடிதமாக இருந்தது.இந்த கடிதம் இன்றைய இளம் காதலர்களிடம் செல்லவேண்டுமென்பது எனது பேரவா!
இதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நன்றி-சமரசம் 1-15 பிப்ரவரி 2013
www.samarasam.net