RGO, GMT, UT, UTC என்றால் என்ன?

இலக்கியம் கட்டுரைகள்
 
இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டி சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்??தேவைதான்..! இதற்குரிய காரணமாக இருக்கும்.
அன்றையத் தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களின் தேவைகளின் ஊடே நேரத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேரநிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக்கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணைக் கொண்டு வகுக்கப்பட்ட நேரக்கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதியில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTC களெல்லாம்.
GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்….
 
RGO Royal Greenwich Observatory– ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் 
 
GMT- Greenwich Mean Time– கிரீன்விச் இடைநிலை நேரம்

UT– Universal Time– உலகளாவிய நேரம் 

UTC– Universal Time Coordinated ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்
 
ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greenwich Observatory):
  • முன்னதாக 1928 முதல், லண்டனில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தில் இயங்கி வந்த வான் ஆய்வுமையமே, ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greewich Observatory- RGO) என்று அழைக்கப்பட்டது. 
  • 1948 ல், இந்த ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (RGO), சசெக்ஸில் உள்ள Herstmonceux Castle என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. (இடம் மாற்றப்பட்டாலும் இதுவும் ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் என்றே அழைக்கப்பட்டது).
  • இதன் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் அனைத்தும் தேசிய கடல்சார் அருங்காட்சியத்துடன் (National Maritime Museum)  இணைக்கப்பட்டு, இதன் பெயர்புராண கிரீன்விச் வானாய்வுக் கூடம் (Old Royal Greenwich Observatory- ORGO) என்றானது.
  • மீண்டும், 1998ல் ​​சசெக்ஸில் இருந்த RGO வின் இயக்கம் நிறைவு பெற்றதைத் தொடந்து, முன்னர்கிரீன்விச்சில் இருந்த புராண ஆய்வுக்கூடம் (ORGO) மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த முறை இதன் பெயர் Royal Obervatory Greenwich (ROG) என்றானது.
கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time- GMT):
  • கிரீன்விச் இடைநிலை நேரம் – GMT என்பது கிரீன்விச் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ள தீர்க்கரேகையை (Zero degree Longitude) பொறுத்து அமையப்பெற்ற சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான ஒரு கால அளவு ஆகும்.
  • அதாவது நடுமட்ட சூரியன் (Mean Sun) சரியாக இந்த ஆய்வுக்கூடத்தின் தீர்க்கரேகையை (Zero degree) ஒத்திருக்கும் பொழுது மணி 12:00 GMT ஆகும். (பூமியின் சுழல் அச்சு 23.5 degree சாய்ந்துள்ளதால், சில நேரம் மெதுவாகவும் சில நேரம் வேகமாகவும் சூரியன் நகர்வது போல் இருக்கும்.  இதை சரி செய்யவும், ஒரே சீரான சூரிய ஓட்டத்தை அளவிட்டு நேரத்தை குறிப்பதற்காகவே ‘நடுமட்ட சூரியனின்’ ஓட்டம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
உலகளாவிய நேரம் (Universal Time):
  • 1928 ஆம் ஆண்டில், சர்வதேச வானியல் சங்கம் பரிந்துரைத்ததின் படி அன்றிருந்த GMT யே (அல்லது கிரீன்விச் சிவில் நேரம்/Greenwich Civil Time) உலகளாவிய நேரம் (UT) என குறிப்பிடப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தான் “உலகளாவிய நேரம் (Universal Time)” மற்றும் “உலகளாவிய நாள் (Universal Day)” அறிமுகமானது.
  • குறிப்பிட்ட வான் ஆய்வுக்கூடத்தில் வகுக்கப்பட்ட நேரத்தை UT0 (“UT-பூஜ்யம்”) என்றனர். பூமியின் சுழட்சியினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும் பொருட்டு, UT0 உடன் அதற்குரிய நாழிகையில் திருத்தங்கள் (லீப் நொடிகள்) சேர்க்கப்பட்டு UT1 அறிமுகப்படுத்தப்பட்டது. UT0 இன் அப்டேட்டட் வெர்ஷன் UT1 எனலாம்.
  • எனினும் பூமியில் ஏற்படும் பருவ மாற்றம், கடல் சீற்றம் போன்றவற்றால் ஏற்படும் விசையேறுதலுக்காக (Momentum changes) UT1 னுடன், சில ஈடேற்றம் செய்யப்பட்டு UT2உருவாகியது. UT1 இன் அப்டேட்டட் வெர்ஷன் UT2 எனலாம்.
  • இந்த UT2  நேர அளவிலும் கூட,  Tidal Friction, மற்றும் High Tides and Winds போன்ற அதிபயங்கர மாற்றங்களினால் பூமியின் சுழற்சியில் ஏற்படும் தாக்கத்தை  தன்னகத்தே உட்கொள்ள முடியவில்லை. ஆக, இந்த சூரிய அளவு முறையிலும் நேர நிர்ணயத்தின் துல்லியம் எட்டப்படவில்லை. இந்த வகையான நேர நிர்ணயங்கள், சிவில் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்புடையதாக இருந்தது.
  • ஆக, GMT —> UT0 —> UT1 —> UT2. தற்பொழுது உள்ள GMT —> UT2 ஆகும்.

சூரியனை வைத்தும், சீரற்ற பூமியின் சுழற்ச்சியை வைத்தும் ஒரு துல்லியமான நேர அளவை குறிப்பிட முடியாத காரணத்தால் அறிவியல் விஞ்ஞானிகள் மாற்று வழியை அறிமுகப்படுத்தினர். அது தான், அட்டாமிக் டைம் (Atomic Time) – அணு நேரம். 

 
ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC  (Coordinated Universal Time):
  • சீசியம் (Cesium) அணுக் கதிர்களின் நிலையான அதிர்வலைகளின் உதவியால் நேர அளவீடு கருவி ஒன்றின் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது.
  • இது அட்டாமிக் டைம் (அணு நேரம்) என்றும் இதன் அளவு அட்டாமிக் செகண்ஸ் (அணு நொடிகள்)என்றும் அழைக்கப்படுகிறது. 
  • இது முற்றிலுமாக ஒரு அறிவியல் சாதனமாகும். ஒரு நாளின் அளவாக 86,400 விநாடிகள் கொண்டு ஒரு நாளின் நேரம் கணக்கிடப்படுகிறது. கணக்கிடப்பட்ட நேரத்திற்கும் (Calculated Time), சூரியனின் ஓட்டத்திற்கும் (Actual Time based on Sun) எந்த தொடர்புமிருக்காது.
  • ஆயினும், விண்ணில் அமைக்கப்பட்டுள்ள International Earth Rotation and Reference Systems Service (IRES) பூமியின் ஓட்டதை கண்கானித்து, தேவைப்படும் பொழுது UTC யுடன் லீப் நொடிகளைசேர்க்கவும் பரிந்துரைக்கும். அதாவது, கணக்கிடப்பட்ட நேரத்தோடு அதற்குரிய திருத்தங்களும் இடம்பெறும். (இங்கு லீப் நொடிகள் என்பது பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை/ பின்னடைவுகளை உள்ளடக்கி, கூட்டவோ குறைக்கவோ செய்யப்படும் மணித்துளிகளின் அளவு ஆகும்).
  • இவ்வாறு பூமியின் சுழற்சிற்கேற்ப கணக்கிடப்பட்ட நேரம் (Calculated Time) அவ்வப்பொழுது ஒத்தியக்கப்படுவதால் இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC  (Universal Time- Coordinatedஎனப்படுகிறது.
  • அணு நேரம் UTC, சூரிய நேரமான UT1 ஐ ஒத்து அதிகபட்சமாக 0.9 நொடிகள் வரையில் தான் வித்தியாசத்தில் இருக்க முடியும்.
 
GMT மற்றும் UTC ஆகிய இரண்டிற்கும் 0.9 நொடிகள் வரையில் வித்தியாசம் இருக்கலாம் என்பதால் மிகத்துல்லியமான GPS, வானியல் கணக்கு போன்ற பயன்பாட்டிற்கு UTC மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். சந்திர கணக்கிற்காக நாம் பயன்படுத்துவதும் UTC நேர கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
மிகத்துல்லியமான பயன்பாட்டிற்கு மட்டும் UTC என்றழைக்கப்படும்.
சுருங்கச் சொன்னால், GMT அடைந்த பரிணாம வளர்ச்சியே UTC எனலாம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *