கண்ணதாசனின் பொன்மொழிகள்

இலக்கியம் சிந்தனைக் கருத்துக்கள்


அறிவாளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் முட்டாளாகவே

வளர்கிறார்கள், நிழலிலே வளரும் செடி சோகையாக இருப்பது போல

பெர்னாட்ஷா வை நினைத்து கொண்டு தன்னை கண்ணாடியில்

பார்ப்பவர்கள், நடிகையை நினைத்து கொண்டு

மனைவியை கட்டிபிடிப்பவர்கள் ஆவர்

கண்களை மூடுங்கள், காதுகளை அடைத்து கொள்ளுங்கள்

இதயத்தையும் மூடுங்கள், செய்துவிட்டீர்களா?

சபாஷ், நீங்கள் அரசியல் வாதியாகிவிட்டீர்கள்

ஒரெ ஒரு அற்பனை சமாளிப்பது  – சர்வாதிகாரம்

ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதுதான் ஜனநாயகம்

விளக்கமாக பேசு, முடிவில் சிந்திக்கும் போது உனக்கே

குழப்பம் வரவேண்டும் அதுவே சிறந்த பேச்சு

அன்பிலே நணபனை வெல்லுங்கள்

களத்திலே எதிரியை வெல்லுங்கள்

பண்பிலே சபையை வெல்லுங்கள்

மஞ்சதிலே மனைவியை வெல்லுங்கள்

மூட்டையை கொடுத்து காசு வாங்குவான் சம்சாரி

காசு கொடுத்து மூட்டையை வாங்குவான் வியாபாரி

எதையுமே கொடுக்காமால் எல்லாத்தையும்

வாங்குவான் அரசியல்வாதி

தனியாக அழுங்கள், கூட்டத்தோடு சிரியுங்கள்

கூட்டத்தோடு அழுதால் நடிப்பு என்பார்கள்

தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்

உலகத்திலுள்ள எல்லோருமே யோக்கியர்தான்

தூங்கும்போது மட்டும்

காதலிக்கும் போது குழந்தையாயிரு அப்போதுதான் அவள்

ஏமாற்றும் போதும் சிரித்துகொண்டே இருப்பாய்

கட்டாயம் காதல் செய்யுங்கள் – ஏனெனில்

சந்தோசம் மட்டுமே வாழ்க்கையல்ல

விதியையும் மதியால் வெல்லலாம்

என்று உன் விதியில் எழுதியிருந்தால்

யார் என்ன நினைக்கிறார்களோ என்று நினைத்து கொண்டே இருந்தால்

நாம் என்ன நினைக்கிறோம் என்பதற்கு மரியாதையே இல்லாமல் போகும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *