கவிதை : ஞானப்பெண்ணே ! (பி.எம். கமால் , கடையநல்லூர்)

அத்தாவின் காலடியில் ஞானப் பெண்ணே !-சுவனம் அமைந்திருக்க வில்லையடி ஞானப் பெண்ணே ! முத்தான உன்பாதத் தடியிலன்றோ -சுவனம் முடங்கிக் கிடக்கிறது  ஞானப் பெண்ணே ! கணவனைப் பேணிக்கொள் ஞானப் பெண்ணே !-இரு கண் அவன் உனக்கு ஞானப் பெண்ணே ! சீரியலைப் பார்க்காதே ஞானப் பெண்ணே-உன்னைச் சீரழித்து விடுமது ஞானப் பெண்ணே ! திருமறையைத்  தினம்  ஓது  ஞானப்பெண்ணே-உன்னைத் திருத்தி வழி காட்டிவிடும் ஞானப் பெண்ணே ! கண் பசுவைக் கண்டபடி ஞானப் பெண்ணே !-நீ கட்டவிழ்த்து விடவேண்டாம் ஞானப் பெண்ணே ! மண் போலப் பொறுமை கொண்ட ஞானப் பெண்ணே !-நீ மன்னிக்கப் […]

Read More

வேராக்கு ! நீராக்கு ! (பி எம். கமால், கடையநல்லூர்)

தொழப்போனால் சாத்தான் தொடர்ந்து வருகின்றான் ! பழச்சாறு போலஎங்கள் பக்தியினை உறிஞ்சுகிறான் ! ஆசைகளைக் கூட்டிவந்து  அம்மணமாய்  எங்கள் முன்னே ஆடவைத்து வலைவிரித்து அதில்விழவும் செய்கின்றான் ! பெண்களைப் பேயாக்கி  பின்தொடரச் செய்கின்றான் ! கண்களின் திரைவிலக்கி காட்சிகளை விரிக்கின்றான் ! கோபத்தீ பற்றவைத்து கொதித்தெழவும் வைக்கின்றான் ! பா வத்தீ நரகிற்கு பாதைகளை அமைக்கின்றான் ! அறம்பேசும் நாவுகளைப் புறம்பேச வைக்கின்றான் ! அடுத்தவன் முதல்பறிக்க ஆசைவெறி யூட்டுகின்றான் ! தர்மத்தின் வாசல்களில் தடைக்கல்லாய் நிற்கின்றான் ! கஞ்சத் தனமள்ளிக் கைகளிலே தருகின்றான் ! ஆன்மாவில் மிருகமாய் அலைந்தவன் திரிகின்றான் ! ஆளுமை தனக்கென்றே அகங்காரம்  கொள்கின்றான் ! […]

Read More

முதுமை

  (பி.எம். கமால், கடையநல்லூர்) முதுமை- இள “மை”  வற்றிய எழுதுகோல் ! காலம் மென்று துப்பிய குப்பை ! வாழ்க்கைத் தொழுகையின் “அத்தஹயாத்” இருப்பு ! அன்று- குடும்பத் தேர்தலின் தலைமைத் தேர்தல் அதிகாரி ! இன்று- வீட்டுத் தேர்தலில் செல்லாத ஓட்டு ! முதுமை- இயலாமை புகுந்த இருட்டு வீடு ! நரைதான் அங்கே நூலாம்படையோ ? முதுமை- வாழ்க்கை ஒளியில் சிறகிழந்த ஈசல் ! மழை நின்ற பிறகு கிளை விடும் தூவானம் […]

Read More

நகைச்சுவை

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க குணம் அழகாய் உயர்ந்தேற்றும்… இதுவே நகை சுவை யாளர் சேவையாகும்! உலக நகை சுவை யாளர் சங்கமாகும்! விண்ணிலே நகை சுவையால் வெடிக்கும் சிரிப்பிலே, கண்ணிலே நீர் பெருகி கருணை சுரக்குமே, மண்ணிலே வாழுவோர்க்கு நகைப்பின் மூலமே. பொன்னைப் போல் புடம் போட்டு தரத்தை    உயர்த்துமே, இது மன புண்ணை […]

Read More

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு பெருமை சேர்க்கும் பேராசிரியரின் பிறந்த நாள்

அரசியலில்……! சந்தனத்தை விட சாக்கடை மணம்தான் அதிகம் என்பது சுதந்திரத்துக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட புழுதிபடிந்த, முட்கள் நிறைந்த அரசியல் பாதையில் கறைபடியாத தன் காலடிச் சுவடுகளால் கண்ணி யத்தை பேணிய புண்ணியத் தலைவர் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் தலைமையில் தூய்மையான அரசியல் நடத்தி வெற்றி பல கண்டு நூற்றாண்டு வரலாறு கொண்ட பேரியக்கம் நம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.  விடுதலை பெற்ற இந்தியா வில் வாழ்ந்து வரக்கூடிய இஸ்லாமியர்கள் […]

Read More

மாதரைக் காப்போம் By டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

  நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் – அண்ணல் காந்தியடிகள்”. சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது. தில்லியில் 23 வயது நிரம்பிய பெண்ணை ஓடும் பேருந்தில் அறுவரால் கூட்டுப் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கிய சம்பவம் நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சினத்தைக் கிளறியுள்ளது. போராட்டமும் தடியடியும் வாதங்களும் சர்ச்சைகளும் நடைபெற்றன. இவை பாலியல் வன்செயல்களுக்கு ஒரு தீர்வைக் […]

Read More

முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு, அக்கரை தொட்டு, இக்கரை வந்து சக்கரை பேச்சால், எக்கரை வென்று,-அபு பக்கரை சார்ந்த சான்றோர்! கூடியே ஒற்றுமையால், கோடி பலன் கண்டவர்கள், நாடியே கல்வியினை, ஓடியே பயின்றவர்கள் […]

Read More

திருநெல்வேலி அல்வா வரலாறு..!!!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி ஜமீன்தார் புனித யாத்திரையாக வட இந்திய புண்ணியத் தலங ்களுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தயாரிக்கப்பட்ட அல்வாவை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். அந்தச் சுவையில் மயங்கிய அவர் அந்த அல்வா தயாரித்தவரையே திருநெல்வேலிக்கு அழைத்து வந்திருக்கிறார். அவர் மூலம் திருநெல்வேலியில் அல்வா தயாரிப்பு துவங்கி இன்று அல்வா என்றாலே திருநெல்வேலி என்றாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.. வட இந்தியாவிலிருந்து வணிகத்திற்காக தமிழகத்தின் தென்பகுதிக்கு வந்த ஒரு குடும்பத்தினர் திருநெல்வேலியில் அவர்கள் ஊரின் அல்வாவைத் தயாரித்திருக்கிறார்கள். […]

Read More

பர்தாப் போடுதல் சரிதான்!

வைரமதைப் பெட்டகத்தில் பாது காத்து ..வைக்கவேண்டும் என்றுணர்ந்து கொண்ட நீதான் வைரமணிப் பெண்மணிகள் ஊரைச் சுற்ற …வைப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்  மெய்ரணமா கும்வரைக்கும் காமு கர்கள் …மேய்ந்திட்ட மேனிமீதுக் காமப் பார்வைப் பெய்தவிடம் தாக்காமல் பாது காக்கப் …பெருங்கேட யம்போலாம் பர்தாப் போர்வை!          கண்ணியத்தைப் போற்றுகின்ற பெண்கள் கற்பைக் …காத்துநிற்கும் பர்தாவை வேணடாம் என்றால் பெண்ணியத்தைப் பேசுகின்ற பெண்கள் நீங்கள் …பெண்ணுக்கு ஏதேனும் பாது காப்பை மண்ணுலகில் தந்துவிட்டுப் பேச […]

Read More

புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2013

வாழ்க்கைப் பயணத்தில் அங்கீகாரம் அவசியம் எனில் மதிப்பும் மேன்மையும் உண்டாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   மனிதவாழ்வு மலர இலட்சியம் சாட்சி எனில் ஆசைகளும் கனவுகளும் நனவாக அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   சமுதாய நலனில் கடமை கருத்தில் எனில் உண்மையும் உழைப்பும் உயர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   கலைகளின் சங்கமத்தில் காட்சிகள் கண்ணில் எனில் அறிவும் ஆக்கமும் வளர அன்புபொங்கும் மனதோடு வாழ்த்துவோம்!   நிலையில்லா வேளையில் பொறுமை வெறுமை எனில் அமைதியும் ஆனந்தமும் […]

Read More