தமிழ்த்துளி

வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வையகமதனில் வான் புகழ் உயர்ந்தே, மாண்புடன் மேன்மையில் வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க செந்தமிழ் வாழ்கவே, வாழ்க பைந்தமிழ் வாழ்கவே, வாழ்க முத்தமிழ் வாழ்கவே…, தமிழின் அறிஞர் திருவள்ளுவரின் திருகுறள் அரும் தமிழ் துளியே, பாரதியாரின் நற்றமிழ் கவியும், புவியினில் பொற்றமிழ் துளியே அவ்வையாரின் அகம் மகிழ் பாடல் அகிலத்தின் தேன் தமிழ் துளியே, அறநாணூரும் கம்பனின் […]

Read More

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவங்கள்!

உம்மை நேசிப்பவரை ஒருக்காலும் வெறுக்காதே! உமக்கு உதவியவரை ஒருநாளும் மறவாதே! உம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்ற எண்ணாதே! 15 வாழ்க்கைத் தத்துவங்கள் 1. அன்பு மட்டுமே வாழ்க்கையின் மேன்மைக்கான வழி. சுயநலமில்லாத சத்தியமான அன்பு ஒன்றே அமைதியாக வாழும் வழி. 2. உம்முடைய எண்ணமே உம்மை வழிநடத்துகிறது. நம் எண்ணங்களே ஒரு பொருளை அழகுபடுத்தவோ அன்றி அவலட்சணப்படுத்தவோ காரணமாகிறது. நல்ல எண்ணங்களே நல்ல செயலுக்கு வித்தாகி, உலகிற்கு ஒளியூட்டுகிறது. 3. வாழ்க்கை சௌந்தர்யமானது. வாழ்க்கையின் அழகான பகுதியை […]

Read More

வெளிநாட்டில் வாழு(டு)ம் உள்ளங்கள்

ஆயிரமாயிரம் ஆசைக் கனவுகளைச் சுமந்து அயல்நாட்டில் வாழுகின்றோம்ஆனால் வாழ்கையின் அர்த்தம் புரியாமல் வாடுகின்றோம் நாங்கள்!! திரைகடல் திரவியம் திராம் கணக்கில் திரட்டினோம் திறைமறைவு காரியங்கள் செய்யாமல். அரபிக்கடல் கடந்தோம் ஆயிரம் தினார்கள் அட்லாண்டிக் சமுந்திரம் கடந்தோம் பல்லாயிரம் யூரோக்கள், டாலர்கள் !! அன்பெனும் சாகரத்தில் மூழ்கி, பாசம் எனும் முத்தெடுக்க தேடுகின்றோம் ஒரு திரைகடலை, ஆனால் அதுவோ பாலைவனத்து கானல் நீராய் மாறி காலங்கள் பலவாகி விட்டது!! எங்களால் அழவும் முடியாது. காரணம் எங்கள் கண்ணீரும் பெட்ரோலாகி […]

Read More

சுனாமி

என் மனம் கனத்திருந்தால் உன் மடி தேடி வருவேன் அமைதியாய் ஆர்ப்பரிக்கும் அலை தொட்டு வரும் ஈரக்காற்று – என் இடர் தீர்க்குமென்று! உன் நீலக்கூந்தல் வாசம் கொள்ள – நீளுமொரு கூட்டம் அங்கே கண்டிருக்கிறேன் அந்தோ….. ஓலங்கள் ………மரண ஓலங்கள் உன்னை சபித்துக்கொண்டிரும் மனித உள்ளங்கள் புரியாத பெயர் சொல்லி -விளையாடும் உன் விளையாட்டின் விலை  – ஒன்றுமறியா அப்பாவிகளின் உயிரோ? அசுரமாய் ஆர்ப்பரித்த  அலையால் – உன் கொடூர வலையால் – உன் மடியெங்கும் எங்கள் மனித உயிர்கள் என் மனம் கனத்திருக்கிறது……….…….! புதுசுரபி 

Read More

திருக்குறள்

திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், […]

Read More

பொங்கல் – ஏம்பல் தஜம்முல் முஹம்மது

திருநாள்,முதலிய கொண்டாட்டங்கள் பல புராதான காலத்திலிருந்து சில நாட்களேனும் மகிழ்ந்திருப்போமே என்று மனிதன் ஏற்படுத்திகொண்டவை;அவற்றுள் சில சிந்திக்க வைப்பவை;சில சமய நம்பிக்கை சார்ந்தவை;. சிந்திக்க வைக்கும் திரு நாட்களில் ஒன்றுதான் பொங்கல். பொங்கல் எனும் தூய தமிழ்ச் சொல்லே அது  பழந்தமிழர் பண்பாட்டுத் திருவிழா என்பதை  நமக்கு உணர்த்தும்.இயல்பாக இருக்கும் ஒன்று அதன் தன்மையிலும் பயனிலும் மிகுந்து,மேம்படுவதைப் பொங்கல் எனலாம்.அன்பு பொங்குவது,இன்பம் பொங்குவது,பால் பொங்குவது என்னும் பேச்சுவழக்கு இதை நமக்கு உணர்த்தும்…  நம்முடைய நாட்டில் ஏற்கப்படும் திருவிழாக்கள்,எதிர்க்கப்படும் […]

Read More

எல்லாம் பழகிபோச்சு !

(பி. எம். கமால், கடையநல்லூர்) இருட்டும் திருட்டும் விரட்டும் விலைவாசியும் புரட்டும் பொய்யும் பொல்லாக் கொலைகளும் எல்லாம் இப்போது எங்களுக்குப் பழகிப் போச்சு ! நாங்கள் வாக்குறுதிகளை நம்பியே வாழ்க்கையை  இழந்தவர்கள் ! இலவசங்களுக்காக வாக்குரிமைக்  கற்பை ஆள்காட்டி விரல் அடையாள மையில் காணா க்கி  விட்டோம் ! ஆட்டு மந்தைகளாய் ஆகிவிட்ட எங்களுக்கு தலைகளைவிடத் தலைவர்கள் ஏராளம் ! ஜனநாயகத்தில் தலைகள்தான் எண்ணப்படும் ! ஆனால் எங்கள் நாட்டில் தறுதலைகள் எண்ணப்படுகின்றன ! ராமன்களுக்கு படையல்களா கப் பள்ளிவாசல் சிதறல்கள் ! அபிஷேகம் நடப்பதோ முசல்மான் குருதியில் ! குரங்குகள் […]

Read More

தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில்தமிழ் இணையப் பயன்பாடு

முன்னுரை : நேற்றைய உலகம் கணினி உலகம், இன்றைய உலகம் இணைய உலகம். அன்று நிலவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டினோம். இன்று நிலவுக்கேச் சென்று சோறு ஊட்டலாம், நாளை நிலவிலேயே சோறு சமைக்கலாம். இத்தகைய நவீனம் நாளும் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் இணையத்தின் தன்னிகரில்லாச் சேவைகள் மற்றும் தேவைகள் பற்றியும் அதை கல்விக்கு எவ்வகையில் பயன்படுத்தலாமென்பது பற்றியும் குறிப்பாக துவக்க/நடுநிலைப் பள்ளிகளில் எவ்வகையில் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விரிவாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.   கணினியில் […]

Read More

பொங்கும் இன்பம்

  கே. ஏ. ஹிதாயத்துல்லா     பனைவெல்லம் பச்சரிசி பருப்பு பானை யிலிட்டு பக்குவமாய் கலந்து பாகாய் கரைந்து மணக்கும் பொங்கல் பொங்குமே எங்கும் இன்பம் தங்குமே !   பட்ட துன்பம் அதைப் பழையதோடு நெருப்பி லிட்டுப் பொசுக்கி விட்டுஇனி தொட்ட தெல்லாம் துலங்க போகி வந்ததே எங்கும் இன்பம் தங்குதே !   கன்னியர் வேல்விழிகள் காளையரை நோக்க காளையரோ ஜல்லிக்கட்டு காளைகளைத் தாக்க குருதிச் சேற்றில் குளித்தெழும் வீரம் பொங்குமே எங்கும் […]

Read More

சோப‌னாராணி பில்லிங் ஸ்டேஷ‌ன், சோப‌னாராணி மெட்ட‌ல் மார்ட் ….

சோப‌னாராணி பில்லிங் ஸ்டேஷ‌ன் எண் 1/23 மெயின் ரோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எதிரில் முதுகுள‌த்தூர் 623 704 சோப‌னாராணி மெட்ட‌ல் மார்ட் எண் 14/231 மெயின் ரோடு ப‌ஸ் ஸ்டாண்ட் அருகில் முதுகுள‌த்தூர் 623 704 சோப‌னாராணி ஸ்டோர் 4/144 மெயின் ரோடு ப‌ஸ் ஸ்டாண்ட் அருகில் முதுகுள‌த்தூர் 623 704 சோலை பிளாஸ்டிக் சென்ட‌ர் 14/128 மெயின் ரோடு ப‌ஸ் ஸ்டாண்ட் அருகில் முதுகுள‌த்தூர் 623 704 சோப‌னாராணி க‌ம்யூனிகேஷ‌ன் 14/231 B […]

Read More