Ø கோடிக்கணக்கில் பணங்கள் சம்பாதிப்பதற்காக
கோடிக்கணக்கானவர்களின் மனங்களை
பாதிக்க செய்ய வேண்டாம் !
Ø மேற்கத்திய விஷமத்தனமான பொய்களை
மறு பதிப்பு செய்து
விசேஷமாக செய்வது போல் நினைக்க வேண்டாம் !
Ø வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி
என்ற பெயரில்
சமூகத்தில் வித்தியாசத்தை ஏற்ப்படுத்த வேண்டாம் !
Ø தேசம்
அமைதியாக இருக்கிறது
துவேசம்
ஏற்ப்படுத்த வேண்டாம் !
Ø ரணங்களுடன் சமூகம் ,
காயங்கள் இன்னும் ஆறவில்லை !
பணங்கள் வேண்டுமா
மரணங்களை ஏற்படுத்தி ?
Ø பிரிட்டிஷ்க் காரன்
பாடத்தில் பொய்யைக் கற்ப்பித்து
மண்ணில் பிரிவினை எற்ப்படுத்தினான்!
இப்போது
படத்தில் பொய்யைக் கற்ப்பித்து
மனங்களில் பிரிவினை ஏற்ப்படுத்த முயற்சிக்கின்றனர்.!
Ø சத்திய மேவ ஜயதே
வாய்மையே வெல்லும் !
இப்படத்தில் சத்தியமே இல்லை !
வெற்றிப் பெரும் சாத்தியமே இல்லை
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
தோஹா – கத்தார்