ஜனவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

நிகழ்வுகள்

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.
இப்போட்டிகள் 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட இருக்கிறது. 5 முதல் 7 வயது வரை ஒரு பிரிவாகவும், 8 முதல் 9 வயது வரை ஒரு பிரிவாகவும்,  10 முதல் 12 வயது வரை ஒரு பிரிவாகவும் நடத்தப்பட இருக்கிறது.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 050 355 08 78 / 056 684 71 20 / 050 51 96 433 / 055 41 45 064 / 050 65 89 305 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளின் பெயர், வயது, தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களோடு முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். info@imandubai.com எனும் மின்னஞ்சலிலும் தங்களது தகவல்களை பதிவு செய்யலாம்.
நிகழ்விற்குப் பின்னர் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்குwww.imandubai.com எனும் இணையத்தளத்தில் விபரம் தெரிந்து கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *