எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு..

                          எங்களுக்கும் சொந்தமாய் கண்கள் உண்டு.. இருப்பினும் காமிரா மனிதர்களே எம் நெற்றிக்கண் திறக்கிறார்கள்.! கண்முன் நடந்தாலும் எதையும் கண்டு கொள்ள மாட்டோம். ஆனால் ஊர் பற்றி எரியும் போது கூடவே நாங்களும் அழுவோம்.! நீதிக்கான எங்கள் கோபங்களுக்கும் ஆத்திரங்களுக்கும் காலக்கெடு உண்டு.! அவை புஸ்வாணமாகிப் போகும் ஊர் அடங்கிய பின்னே! சினிமாக்கள் எங்களின் சிறைச்சாலைகள். தொலைக்காட்சிகள் எங்கள் சவப்பெட்டிகள். […]

Read More

நீதி என்பது நிறம் பார்த்தா? மதம் பார்த்தா? வாழுமிடம் பார்த்தா?

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் துவங்குகிறேன்.. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லியில் 23 வயதை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி ஒருவரை ஓடும் பஸ்ஸில் சில மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டு மிகவும் பாதிப்புக்குள்ளான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் செய்தி இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி நாட்டின் பல பகுதிகளிலும் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம், போராட்டம்,லோக் சபா, ராஜ்சபா சோகமயம் என்ற அளவுக்கு கொண்டு வந்துவிட்டது. […]

Read More

ஜமால் முஹம்மது கல்லூரி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, பல்கலைக்  கழகமாய் மாறும்! ——————————————————— இறைவன் மறைதனில் கூறுகின்றான் ஓதுவீராக, எழுது கோலை கொண்டு, கற்று கொடுத்தான்! மனிதன் அறியாததை அறிந்து கொண்டான்! சீன தேசம் சென்றேனும், சீர் கல்வி பயிலென்றார் அண்ணல் இரசூலுல்லாஹ்! கற்றவரே உயிருடையார், கல்லாதார் இறந்தோரே, என்றார் திருவள்ளுவர்! இன்று கலாம் கண்ட கனவை, அன்றே கண்டவர்கள், ஜமால் முஹம்மது ராவுத்தர், காஜா மியான் ராவுத்தர், கனவினும் மேலாய் வென்றது, ஜமால் முஹம்மது கல்லூரி! கல்வியை விதைத்து, […]

Read More

அதிகாலை ஆண்கள்

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் கட்டினோம்..? நபி […]

Read More

புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒரு வகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது விஞ்ஞானிகள் எலிக்கு புற்று நோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாத காலமாக எலிக்கு செலுத்தி வந்தனர் . எலி உடலில்/ இருந்த புற்றுநோய் செல்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதியசெல்கள் உருவாகின, இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது. ஒட்டக பால் மற்றும் […]

Read More

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

சுவாமி விவேகானந்தர் குமரி முனையில் உள்ள பாறையில் தவம் 120 செய்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது 150 வது ஆண்டு  ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது…. ————————— ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்   நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். தேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு […]

Read More

டெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்ற சித்தர் கோட்பாடுகளின் படி பருவகால சூழ்நிலைகளில் பூமியில் மாறுபாடுகள் உண்டாகும் போது உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டு பூமியின் தட்ப வெட்பங் களுக்கு தகுந்தார் போல் உடல் நிலை மாற்றமடையும். இதில் பல நோய்கள் உடலில் தோன்றி பின் மறைந்து விடும். சில நோய்கள் மட்டும் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்த நிலையில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கிவிடும். அதில் ஒன்றுதான் தற்பொழுது தமிழகத்தை மிரட்டிக்கொண்டு இருக்கும் “டெங்கு காய்ச்சல்”எனும் கொடிய நோயாகும்.இது கொசுவால் […]

Read More

முதுவை தீனோர்களை வாழ்த்தும் பாடல்

வாழ்க வாழ்கவே வாழ்கவே, முதுவை தீனோர் வளமுடன் எந்நாளும் வாழ்க வாழ்கவே வாழ்கவே நீண்ட ஆயிளும் நிறைந்த திருப்தியும்…, மீண்டும் மீண்டும் நிதம் மகிழ்வுடன் வனப்பும், வேண்டும் ஒற்றுமை கயிற்றெனும் பிணைப்பும், ஆண்டுக்கொருமுறை இணக்கத்தின் இணைப்பும், வல்லவன் அருளால் நல்லவை கூடி        [வாழ்க வாழ்கவே வாழ்கவே] அக்கரையுடனே இக்கறை வந்தே…, சக்கரை பேச்சால் இனிமையும் தழைத்தே, பக்கரை போன்றே அருங்குணம் சிறந்தே.., எக்கரை தோரும் முதுவையின் புகழே.., ஏஹனின் இஸ்லாம் முழுமையும் பேணி,          [வாழ்க […]

Read More

ஜனவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் வினாடி வினா போட்டி துபாய் : துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு வினாடி வினா போட்டியினை 04.01.2013 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி முதல் அல் தவார் ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். இப்போட்டிகள் 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட இருக்கிறது. 5 முதல் 7 வயது வரை […]

Read More