மஸ்கட் பயணம் – காவிரிமைந்தன்

மனம் நிறைந்த மஸ்கட் பயணம்  26.10.2012 முதல் 28.10.2012 வரை முன்பொரு நாள் 1992ல் பம்மலில் – இலக்கியப் பட்டறையிலிருந்து நண்பர் பூங்கணியன் அலுவல் நிமித்தமாய் மஸ்கட் செல்கிறார் என்பதை முன்னிட்டு நடைபெற்ற வழியனுப்புவிழாவில் ஓவியக் கவிஞர் ஷேக் அவர்கள் பேசும்போது – “ஒரு பேனா பறந்து போவதைப் போல் உணர்கிறேன்” என்றார்.  பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த எனக்கு அந்த உவமை மிகவும் பிடித்திருந்தது!  எந்த அளவு தெரியுமா? அந்தப் பேனா நானாக இருக்கக் கூடாதா என்று […]

Read More

தாலாட்டு

பத்துமாத பந்தமதுவும் பனிக்குடம் உடைத்துவரும்! சித்தமெல்லாம் மகிழ்ந்திருக்க சிறுஉயிரின் வரவுபெறும்! முத்தமழைப் பொழிந்தவளாய் தாயுள்ளம் கனிந்துருகும்! தத்திவரும் மழலைகண்டு தாவிவரும் கரமிரண்டும்!! பட்டுமெத்தை தேவையில்லை தாய்மடியே சொர்க்கமடி! பால்மழலை பசியாறி களைத்துறங்கும் வேளையடி! தொட்டிலிலே கண்ணுறங்க தாய்பாடும் தாலாட்டு! மொட்டவிழா மலர்போல கண்ணசையும் சேய்கேட்டு!! தன்குலத்துப் பெருமைசொல்லி தாலாட்டுப் பாட்டுவரும்! நின்னழகைப் புகழ்ந்தபடி நீண்டபல வரிகள் வரும்! உன்முகத்தைப் பார்த்தபின்னே உனக்கு இணை ஏதுமில்லை – என பண்ணசைய கண்ணுறங்கும் பால்நிலவே தாலேலோ!! சொல்லாலே சுகம்தருவாள் அம்மாவின் […]

Read More

குழந்தை ~ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச் செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ! குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற ஒளிஇமை விளக்கி வெளிப்படும் கண்ணால் முதுவை யத்தின் புதுமை கண்டதோ என்னவோ அதனை எவர்தாம் அறிவார்? தங்க மாதுளைச் செங்கனி பிளந்த மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு! வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ? பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ? செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச் சிரித்தது. பிள்ளை சிரிக்கையில் […]

Read More

காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு

கடலில் ஒரு துளியின் பங்கு-காலத்தால் நிலை பெற்ற வரலாற்றுக் குறிப்பு. ”தன்னிற்சிறந்த தமிழும் தமிழ்வளர்த்த என்னிற்சிறந்த மறவர்களும்….” என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்.இந்த வரிகளில், 1.தமிழ் தன்னிலும் சிறந்தது,2.அதை வளர்க்க வேண்டும்,3.பாவேந்தர் தமிழ் வளர்த்தார்,4.அவரை விடவும் தமிழைப் பெரிதும் வளர்த்தவர்கள் உள்ளார்கள்,5.அவர்களை மதிக்கும் பாங்கு பாவேந்தருக்கு இருந்தது,6.இந்தப் பண்பும்,தமிழ் வளர்க்கும் பாங்கும் அனைவருக்கும் இருக்க வேண்டும்….எனப் பல செய்திகள் உணர்த்தப் படுகின்றன. தமிழுக்கு யார் எந்த அளவுக்குத் தொண்டு செய்திருந்தாலும் அதற்குப் பதிவு வேண்டும்;தமிழ்த் தொண்டு […]

Read More

வீடென்று எதனை சொல்வீர்…?

வீடென்று எதனை சொல்வீர்…? – இப்னு ஹம்துன் ஃபக்ருதீன் வீடென்று எதனை சொல்வீர்…? என்னடா மாலன் கவிதை தலைப்பாக இருக்கிறதே என்று பார்க்க்கிறீர்களா? ஒரு பிரபல இணைய மடலாற்குழுமத்தில் வீடு என்ற தலைப்புக்கேற்ப நண்பர் இப்னு ஹம்துன் எழுதிய கவிதை இது.. இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..  * வீடென்ப வீடில்லை; வீடென்று சொன்னாலே   ஓரமைதி மனதுள்ளே குடைவிரிக்கும் இவ்வுலகில் கூடொன்றில் பறவையினம் கொள்கின்ற மனமகிழ்ச்சி;   குளக்கரையின் தென்றல்போல் குளிர்ச்சியினை மனங்காணும் தேடல்கள் வீட்டுக்கே! தெள்ளியநல் […]

Read More

தாலாட்டு

தாய்மையின் பாசத்தை காட்டுகின்ற தாலாட்டு முன்னோரின் நிகழ்வினை, நினைவிற்கு கொண்டு வந்து, நயமாக ஏற்றி வைத்து, நளினமாக பாடும் தாலாட்டு! வீர தீர சரித்திரத்தை, சூரமான சம்பவத்தை, கதையினை கானமாக கூறுகின்ற தாலாட்டு! ஏற்றமும் , இறக்கமுமாய், எதுகையும் , மோனமுமாய், செவிகளுக்கு இனிமையுமாய், விருந்தளிக்கும் தாலாட்டு! கானத்தால் ஞானத்தை ஏற்றி, தானத்தை , மானத்தை ஊட்டி, திறத்தை தீரத்தை தீட்டி, பயத்தை பறந்தோட்டும் தாலாட்டு! அறிவினை சலவை செய்து, பக்குவத்தை பதியச் செய்து, சொக்கவைத்து உறங்க செய்யும், சுந்தர மந்திரமே தாலாட்டு! —————————————————————- தாய்மையின் தாலாட்டு ======================== ஆராரோ ஆரிரரோ, ஆரமுதே ஆரிரரோ, அன்பான ஆருயிரே, அழகரே […]

Read More