அறிவு இடும் ஆணையினால்
உடலுடன் உலா வருகிறோம்!
எழும்புகளுக்கெல்லாம்
சதைகளை சட்டையாய் போர்தி
அசைவிற்கு இசைந்தாட
மூட்டுகள் பொருத்தி,
சுவாசத்தை வாங்கிக் கொடுக்க
வாசல்கள் வைத்து
காற்றழுத்த பைகள் கொண்டு
நரம்புக்குள் ரத்த்ஙள் ஓட்டி
உணவை உள் வாஙகி வைக்க
குடோன்களும்–அதனை
செரிமான்ம் செய்திட
சுருள் குழாய்களும்,
சத்தானதை ஏற்றுக் கொண்டு
சக்கையினை வெளியில் தள்ளி
கிட்னீ இயந்திரத்தால்
சுத்திகரிப்பும் செய்து–இது போல்
மானுடல் அனைத்துருப்புகளையும்
அறிவே இய்க்குகிறது!
ஓரறிவான தாவரங்கள் முதல்,
ஐந்தறிவான விளங்கினத்திற்கும்,
கிட்டிடாத சிரிப்பும்,பேசுதல் அறிவும்
பெற்ற்தோடல்லாமல்
ப்குத்தறிகின்ற அறிவும் பெற்ற்த்னால்
உயிர் ஜீவன்களில் முதன்மையுமானோம்,
நாம் பெற்ற அறிவிற்கு மேல்
எவ்வினமும் பெற்றிருக்கவில்லை-ஆதலால்
நாமே முடிவுமானோம்!
விருதை.மு.செய்யது உசேன்