ஏ.எஸ்.பி.,பொறுப்பேற்பு

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ஏழு மாதத்திற்கு பின், ஏ.எஸ்.பி., விக்ரமன் நேற்று பொறுப்பேற்ற பின் கூறுகையில், “”போக்குவரத்து சிக்கல் சீரமைக்கப்படும். பொதுமக்களின் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கபடும். கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் தடுக்கபடும்,” என்றார்.

Read More

புனித ஹஜ்

“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக : புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். இதோ இன்னும் சில தினங்களில் லப்பைக்….. அல்லாஹும்ம லப்பைக்.. லப்பைக்…….லாஷரீகலக லப்பைக் ….. இன்னல் ஹம்த, வன்னி’மத, லகவல் முல்க் …… லா ஷரீகலக்.. எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி […]

Read More

குருதியில் நனையும் காலம்

விகடன் வரவேற்பறை   குருதியில் நனையும் காலம்  – ஆளூர் ஷாநவாஸ் வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18.பக்கங்கள்: 136விலை: 100 பல்வேறு இதழ்களில் ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சிறீஷீsமீபீ சிஷீனீனீuஸீவீtஹ் ஆகவே பார்க்கப்படும் இஸ்லாமிய சமுதாயத்தின் உள்ளே நடக்கும் சிக்கல்கள் பொதுச் சமூகம் அறியாதவை. ஊடகங்களாலும் அதிகாரத்தினாலும் தீவிரவாத முகம் கொடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் வலியைப் பேசும் நூல். இஸ்லாமியரான ஆளூர் ஷாநவாஸ் தன் சொந்த மதத்தின் பழமைவாதிகளையும் அடிப்படைவாதிகளையும்கூட விமர்சிக்கிறார். ஆனால், […]

Read More

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் :துல்ஹஜ்

  மாதத்தின் சிறப்பு:       நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானதாகும். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதையும் விடவுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்! என்றாலும் அல்லாஹ்வின் பாதையில் தம் உயிர், பொருளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்ற பின்னர், அதில் எதனையும் திருப்பிக் கொண்டு வரவில்லையோ அவரின் நற்செயலைத்தவிர! என்று […]

Read More

“தியாகம் என் கலை!”

நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல் வரலாறானது; அதாவது- வாழும் வரலாறாக- உலக முடிவு நாள்வரை நீளும் வரலாறாக! அதிலே நமக்குள்ள பங்கை நாமறிந்தோமா? ஆன்மீக உலகம், திரும்பத் திரும்ப நினைவு கூர்ந்து நெகிழும் அந்தத் தியாகம்- ஒரு குடும்பமே கூடிச்செய்த […]

Read More

மதுப்பழக்கம்—மருத்துவர்களின் பார்வையில்

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ – இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர முடியும்.   இந்நாள் முதல்வர்  கடந்த தனது ஆட்சியில் டாஸ்மாக்கைக் கொண்டு வந்தபோது, அவரே அது இந்த அளவுக்குப் பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் என்று எதிர்பார்த்திருக்க […]

Read More

அச்சுறுத்தும் டெங்கு! என்ன செய்யலாம், எப்படித் தப்பிக்கலாம்?

பகல் நேர கொசுக்கடியே காரணம் ஏடிஸ் (Aedes) எனப்படும் கொசு கடிப்பதனாலே இந்த நோய் ஏற்படுகிறது. இந்த கொசு நன்னீரில்தான் உயிர்வாழும். பகல் நேரத்தில் மட்டுமே இவை கடிக்கும் என்கின்றனர். மருத்துவத்துறையினர். இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? சாதாரண காய்ச்சல் போல தொடங்கினாலும் கண்வலி, தலைவலி, மூட்டுவலி ஏற்படும். வயிற்றுவலியும் தொடர் வாந்தியும் இருக்கும். உடலில் அரிப்பு இருக்கா?தசைகளில் வலி படிப்படியாக ஏற்பட்டு அதிகரிக்கும். சருமத்தில் அரிப்பு ஏற்படும். கால் முட்டிக்கு கீழே சிவந்த புள்ளிகள் தோன்றும். […]

Read More

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் …

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் சின்னஞ்சிரு மகிழ்வும் பென்னம் பெரிதாகும் [ சிரிச்சா போதும்] அரியாசனத்திலே அரசாண்ட போதும் , சரியாசனம் போல் நகைசுவை வேண்டும் சரித்திரத்தை நோக்கின் விகடங்கள் புரியும் அரிதான நகையே அறியாமை நீக்கும் , அறிவொளியை கூட்டும் முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய் தப்பது முறிய நாம் சிப்போம் நன்றாய் [ சிரிச்சா போதும்] புணிதங்கள் சேர்க்கும் அனிதங்கள் விலகும் பணி தந்த சோர்வை நகைசுவை போக்கும் பினி யாவும் நீங்கும் கனியாக இனிக்கும் மனிதத்தின் […]

Read More

டெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி…

டெங்கு காய்ச்சலுக்கு மூலகாரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க நாமும் பல வழிகளில் போராடித் தோற்றும் விட்டோம். இதோ ஒரு எளிய அதிக செலவில்லாத ஒரு வழி! முயற்சி செய்து தான் பாருங்களேன். ஒரு 2 லிட் பெப்ஸி அல்லது கோகோ கோலா பாட்டிலை எடுத்து, அதை சரி பாதியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். கீழ் பாக பாட்டிலில் அரைப் பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றவும். அதில் 3/4 கப் பிரவுன் சுகர் எனும் பழுப்பு நிற […]

Read More