பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

முதுவை ஹிதாயத்

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் சார்பில் பெருநாள் சந்திப்பு!

———————————————————————————

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 04-09-2012 அன்று மாலை சென்னை ஆயிரம் விளக்கு ஹோட்டல் கிரிஸ்டல் ரெசிடென்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்ஹாஜ் ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது. மெளலவி அல்ஹாஜ் நூருத்தீன் சகாஃபி கிராஅத் ஓதினார். தொண்டு இயக்க மாநிலத் தலைவர் அல்ஹாஜ் கே.ஏ.மன்சூர் வரவேற்புரை ஆற்றினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி வருகை தந்திருந்த அனைவரையும் அறிமுகப்படுத்தித் தொகுப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஜெத்தா தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் இராம்குமார், துபை ஈமான் அமைப்பின் ஊடகத் துறைச் செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், துபை இ.டி.ஏ. நிறுவன மேம்பாட்டுத் துறை மேலாளர் மொஹிதீன் பாட்சா மற்றும்  தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தொண்டு இயக்க மாநிலப் பொருளாளர் அல்ஹாஜ் முஹம்மது சிக்கந்தர் ஆகியோர் பொன்னாடை போர்த்தப்பெற்றுக் கெளரவிக்கப்பட்டார்கள். நீதியரசர் தமது சிறப்புரையில் பள்ளி-கல்லூரி செல்லும்

மாணவியருக்கு மாற்றுத் திசைகளில் அவர்களது கவனம் செல்லாதிருப்பதற்குத் தகுந்த பயிற்சி

அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநிலச் செயலாளர் ஒட்டன்சத்திரம் அல்ஹாஜ் சேக் அப்துல் காதர் நன்றி கூறினார். திருவ்ள்ளூர் மாவட்ட அரசு காஜி மெளலவி அல்ஹாஜ்

அப்துல்லாஹ் ரஷாதி சிறப்புத் துஆ செய்தார்.

அரஃபாத் டிராவல்ஸ் அல்ஹாஜ் இத்ரிஸ், மூத்த ஊடகத் துறையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பேராசிரியர்கள் டாக்டர் மு.இ.அஹமது மரைக்கார், டாக்டர் பஹ்மானி, உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஃபஜ்லுல்லாஹ், சென்னை மெட்ரோ ஆங்கில  நாளேட்டின் ஆசிரியர்

வசீகரன் நாசர், ஏ.ஐ.எண்டர்பிரைசஸ் அல்ஹாஜ் இன்ஜினீயர் அப்துல் மஜீத், சிறுபான்மையினர் நல அறக்கட்டளை ஷஃபி அஹ்மது, இ.டி.ஏ.மெல்கோ பொது மேலாளர் அல்ஹாஜ் ஹசன் அஹமது, இ.டி.ஏ. அபுல் கலாம் ஆஸாத், மூத்த பத்திரிகையாளர் மீரா மைதீன், ஜி டி.வி.அப்துல் அஜீஸ், மூன் டி.வி. முதன்மை இயக்க அலுவலர் அல்ஹாஜ் எம்.பி.எம்.அப்துல் காதர், தொழில் நுட்பத் தலைவர் ஷர்புத்தீன்,

மேலாளர் தாவூத்ஷா, வாணியம்பாடி முஹம்மது நயீம், மணிச்சுடர் ஷரீஃப், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கப் பல்வேறு மண்டலப் பொறுப்பாளர்களான அல்ஹாஜ் இஸட். ஃபெரோஸ்தீன்,

அல்ஹாஜ் காதர், ஹசன் அம்பலம், சர்ஃபுத்தீன், முஹம்மது ஹுசைன், மெளலவி முஜிபுர் ரஹ்மான், பட்ரோடு ஷர்புத்தீன், மெளலானா அப்துல் ஹை, தொழிலதிபர் நாசர் உள்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *