பெருமானே பெருந்தலைவர்

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)     அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம் அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும் அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை ! அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !! சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு, சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு, ’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !   அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் […]

Read More

துபையில் இந்திய கன்சுலேட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

துபை : துபையில் இந்திய கன்சுலேட் இஃப்தார் நிகழ்ச்சியினை 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை கிராண்ட் ஹயாத்தில் நடத்தியது. இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா அனைவரையும் வரவேற்றார். மேலும் சமூகத்திற்கு நமது பங்களிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற காஸ்மாஸ் தலைவர் ராம் புக்‌ஷானி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் வசிப்பதாகவும், தனது தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வினை அளிப்பதாகவும் தெரிவித்தார். இஸ்லாமிய சகோதரர்களுடன் இஃப்தார் நிகழ்வில் பங்கேற்பது பெரும் மகிழ்வினை அளிக்கிறது […]

Read More

கண்ணதாசனின் இதயச் சுரங்கத்துள்தான்…..

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் “என எழுதிய கண்ணதாசனின் இதயச்சுரங்கத்துள்தான் எத்தனை கேள்வி…? கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன ஒரு செய்தி : செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார்கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்திசிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப்போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில்படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப்போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது.நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்துநடந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாகநடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்திசிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரிஇருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். தன வீட்டில்உள்ளவர்களிடம் இந்தப் படத்தைப் பார்த்து கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா..? “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும்என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லைஎன்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம்எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம். அந்தப் பாடல்…. மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்! குணம்! அது கோவிலாகலாம்… மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

Read More

சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சட்ட வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் பாராட்டு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 04-08-2012 அன்று பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் ஒற்றுமை, இன மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டார். இச்சங்கத்தின் கல்விப் பணிகளைப் பாராட்டி பேசியதுடன், […]

Read More

வேர்கள் : என்றும் வாழும் உமர்

முதுவைக் கவிஞர் ஹாஜி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ அகிலத்தை ஆளுகின்ற அன்பான பேரிறைவா ! ஆரம்பம் உன்பெயரால்; அத்தனையும் உன்னருளால் ! மகிமைக்கு உரியதிரு மென்குரலார் மைதீ. சுல்த்தான் மன்னவராய் வீற்றிருக்கும் மன்றமிதை வாழ்த்துகிறேன் ! முகில் மட்டும் வானத்தில் வருவதிலே பயனென்ன? மதியோடு சேர்ந்துவந்தால் மதிப்பாரே ! வியப்பாரே !! தகைசார்ந்த வெண்ணிலவுக் கவிஞருடன் தமியேனும், தன்னடக்கம் கூறுகிறேன் ! துளிமுகிலாய் சேருகிறேன் ! விழுதுகளும் வேருடனே வீற்றிருக்கும் வேளையிலே, இந்த விழாவிற்கு இந்த […]

Read More

நறுக்குவோம் பகையின் வேரை

மலேஷிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை நறுக்குவோம் பகையின் வேரை முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங் கேட்டால் ஆற்ற விளைவது நாடு ! பொறையொருங்கு மேல் வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு ! “மிகுந்த பொருள்வளம் உடையதாகவும், மக்கள் எல்லோரும் விரும்பத் தகுந்ததாகவும், கேடில்லாததாகவும், மிகுந்த விளை பொருளை ஈட்டித்தருவதுமே நாடாகும். மேலும் “பிற அண்டை நாட்டு மக்கள் தன் நாட்டில் குடியேறுவதால் ஏற்படும் […]

Read More

ம‌ஸ்க‌ட் த‌மிழ் முஸ்லிம் ச‌ங்க‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

ம‌ஸ்க‌ட் : ம‌ஸ்க‌ட் த‌மிழ் முஸ்லிம் ச‌ங்க‌த்தின் இஃப்தார் நிக‌ழ்ச்சி 27.07.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை வாதி க‌பீர் ம‌ஸ்க‌ட் ட‌வ‌ரில் மிக‌ச் சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. ஹாஜி மீரான் சாஹிப் ம‌ற்றும் மௌல‌வி முஹ‌ம்ம‌து ஃபாரூக் ஆகியோர் ர‌ம‌லான் மாத‌ம் குறித்த‌ சிற‌ப்பிய‌ல்புக‌ளை சிற‌ப்புச் சொற்பொழிவாக‌ வ‌ழ‌ங்கின‌ர். 650 க்கும் மேற்ப‌ட்டோர் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ன‌ர். இந்நிக‌ழ்ச்சி க‌ட‌ந்த‌ 10 ஆண்டுக‌ளாக‌ ந‌டைபெற்று வ‌ருவ‌தாக‌ நிக‌ழ்வின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த‌ முஹ‌ம்ம‌து அன்வ‌ர் தெரிவித்துள்ளார். அப்துல் ர‌வூஃப், சிராஜுத்தீன் […]

Read More

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பு ந‌ட‌த்திய‌ இஃப்தார் நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு தமிழ்த்தேர் மாத இதழ் சார்பில் துபாய் கராமா சி்வ்ஸ்டார் பவனில் 29.07.2012 ஞாயிற்றுக் கிழமை மாலை இப்ஃதார் எனும் நோன்பு திறப்பு நிக‌ழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த விழாவிற்கு அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்க,  சிறப்பு விருந்தினர்களாக ஈடிஏ அஸ்கான் குழும‌ ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு மேலாள‌ர் செய்ய‌‌து அபுதாஹிர் மற்றும் இண்டோ அர‌ப் டெக்க‌ர் குழும‌ மேலாண்மை இய‌க்குந‌ர் புண்ணியமூர்த்தி ஆகியோர் கலந்து […]

Read More