துபை : அமீரகத்தில் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தின விழா 15.08.2012 புதன்கிழமை காலை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
துபை இந்திய கன்சுலேட்டில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார்.
நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அபுதாபியில் இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார்.
ஷார்ஜா, அஜ்மான், ஃபுஜைரா, உம்முல் குவைன், கல்பா, ராசல் கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய சமூக மையங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி அமீரகத் தலைவர்கள் பலரும் இந்தியத் தலைவர்களுக்கும், மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.