துபை : துபை இந்திய நண்பர்கள் சங்கம், இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய சமூக நலச்சங்கத்தின் ( Indian Community Welfare Committee – ICWC ) ஆதரவுடன் இந்தியாவின் 66 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 10.08.2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.
ரத்ததான முகாமினை இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து மருத்துவ படிவங்களை வழங்கினார். இந்திய சமூக நலச்சங்கத்தின் கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய தலைமைப் புரவலர் சித்தார்த் பாலச்சந்திரன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். லத்திஃபா மருத்துவமனையின் ரத்த வங்கியின் ரீம் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்பித்தார்.
இம்முகாமில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உயிர்காக்கும் உதிரத்தை ரத்ததான முகாமில் வழங்கினர்.
இந்திய நண்பர்கள் சங்க ரத்ததான குழுவின் ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்.