துபை : துபையில் இந்திய கன்சுலேட் இஃப்தார் நிகழ்ச்சியினை 05.08.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை கிராண்ட் ஹயாத்தில் நடத்தியது.
இந்திய கன்சுல் ஜென்ரல் சஞ்சய் வர்மா அனைவரையும் வரவேற்றார். மேலும் சமூகத்திற்கு நமது பங்களிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற காஸ்மாஸ் தலைவர் ராம் புக்ஷானி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தில் வசிப்பதாகவும், தனது தாய் நாட்டில் இருப்பது போன்ற உணர்வினை அளிப்பதாகவும் தெரிவித்தார். இஸ்லாமிய சகோதரர்களுடன் இஃப்தார் நிகழ்வில் பங்கேற்பது பெரும் மகிழ்வினை அளிக்கிறது என்றார்.
நிகழ்வில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மனித வள மேம்ப்பாட்டுத்துறை சீனியர் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர்கான், இந்திய சமூக நல மைய கன்வீனர் கே. குமார், துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், இணைப் பொதுச்செயலாளர் பிரசன்னா, இந்திய கன்சுலேட் அதிகாரிகள், தொழிலதிபர்கள், அமீரகப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.