சிங்கப்பூர் இஃப்தார் நிகழ்வில் அமைச்சர் சண்முகம் பங்கேற்பு

தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சட்ட வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் பாராட்டு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை 04-08-2012 அன்று பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் ஒற்றுமை, இன மற்றும் சமய நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் கலந்து கொண்டார். இச்சங்கத்தின் கல்விப் பணிகளைப் பாராட்டி பேசியதுடன், கல்விதான் முன்னேற்றத்திற்கு சிறந்த வழி என்றும், ஒன்றுபட்ட சமூகமாக திகழ்வது அவசியம் என்றும் எடுத்துரைத்தார் சிங்கப்பூர் அமைச்சர் கா. சண்முகம்.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக நீ சூன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளருமான இணைப் பேராசிரியர் டாக்டர் முஹம்மது பைசல் இப்ராஹிம், பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி முஹம்மது அப்துல் ஜலீல், துணைத்தலைவர் ஹாஜி முஹம்மது ரபீக், டாக்டர் ஹிமானா சையத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விப்பணிகளை ஆற்றிவரும் இச்சங்கம், சிங்கப்பூரின் சிறைக் கைதிகளுக்கு நல்லுபதேசம் வழங்கும் சேவையில் ஈடுபடவிருப்பதாக அறிவித்தார், சங்கத்தின் தலைவர் முஹிய்யத்தீன் அப்துல் காதர். ஹமீது கௌஸ் கிராஅத் ஓத, நிகழ்ச்சியை வழிநடத்தினார் அமானுல்லாஹ். மௌலவி கலீல் அஹ்மது ஹசனி ரமலானின் சிறப்பைப் பற்றிப் பேசினார்.  சிறப்பு விருந்தினர்களுக்கு தலைவர் அப்துல் காதரும், செயலாளர் அப்துல் சுபஹானும் பொன்னாடைப் போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கினர். ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்களும், சமூகத் தலைவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வு, சிங்கப்பூரின் தேசிய தின வாழ்த்துக்களைக் கூறி, இனிதே நிறைவுற்றது.

செய்தி: முஹிய்யத்தீன் அப்துல் காதர்

தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ________________________________________________________________

JAMAL MOHAMED COLLEGE ALUMNI ASSOCIATION (SINGAPORE CHAPTER)

100 JALAN SULTAN #09-07 SULTAN PLAZA, SINGAPORE 199001

Tel: 63981020 Fax: 63981030 Email: contact@jmcalumni.org.sg

Website: www.jmcalumni.org.sg  UEN No.: T10SS0160K

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *