கனடா பல்கலை. டீனின் பாராட்டுப் பட்டியலில் முதுகுளத்தூர் இளைஞர்

கனடா பல்கலையில் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர் சென்னை : சென்னையில் ஈடிஏ மெல்கோ நிறுவன பொது மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஹெச். ஹஸன் அஹமது. இவரது மகன் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர் கனடாவின் வான்கூவர் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தை க‌டந்த‌ 11.02.2012 சனிக்கிழமை இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு பெற்றார் என்ற‌ செய்தியினை முதுகுள‌த்தூர்.காம் மூல‌ம் அறிந்திருப்பீர்க‌ள். மேலும் த‌ற்போது இலண்டனின் ஹெர்ட் ஃபோர்ட் ஷையர் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் […]

Read More

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

முதுகுளத்தூர்:ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தில் ஆறு மாதங்களாக குடிநீர் இல்லாததால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை, கிராமத்தினர் சிறைபிடித்தனர். முதுகுளத்தூர் காத்தாகுளத்திற்கு சடையனேரியிலிருந்து காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குழாய் பழுதால், ஆறு மாதங்களாக வினியோகம் தடைபட்டது. இதனால் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் சேகரித்தனர். அந்த கிராமத்தினர், காத்தாகுளம் கிராமத்தினர் குடிநீர் எடுக்க தடைவிதித்ததால், கடும் அவதிப்பட்டனர். அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று, ஆய்வுப்பணிக்காக வந்த முதுகுளத்தூர் பி.டி.ஓ., முத்திளங்கோவன், மேற்பார்வையாளர் சேதுபாண்டியை […]

Read More

குர்ஆன் விரிவுரை !

( மெளலவி அப்துர் ரஹ்மான் ) வலாயெஹ்ஸ பன்னல்ல ஸீன யப்கலூன பிமா.. ஆதாஹு முல்லாஹு மின் பள்லிஹு ஹுவகைரல் லஹும் பல்ஹுவஷர் ருல்ல ஹும். ஸயுதவ்வ கூனமா பகிலூ பிஹு யவ்மல் கியாமா. வலில்லாஹி மீராஸுஸ் ஸமாவாதிவல் அரள் வல்லாஹு பிமாதஃமலூனகபீர். அல்லாஹ் வழங்கிய அருட்கொடையிலிருந்து நீங்கள் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். மனிதர்கள் தமக்கு வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ள வேண்டாம். கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு அவையே கழுத்தில் அணிவித்து பாம்பாக மாற்றப்படும். தமது மனைவி, மக்கள், குடும்பத்தார்க்கு […]

Read More

சட்ட விரோத பரிசு வாங்காதீர்

( மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம் புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை ) என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற தந்தையார், அதே நாளில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் தேர்வு பெற்றார். 30,000 மக்கள் எண்ணிக்கையில் அமைந்த அழகிய தீவு ராமேஸ்வரம். மதம் சார்ந்து அவர் […]

Read More

பரமக்குடியில் பரிசளிப்பு விழா

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி ராஜா திருமண மஹாலில் 07.07.2012 அன்று வெகு சிறப்பாக […]

Read More

சோதனைகள் வெற்றிக்கே ! ( ஆலங்குடி நூ. அப்துல் ஹாதி பி.ஏ., )

ஒவ்வொரு மனிதனும் நன்மையும், நலவும், செல்வமும், செழிப்பும் ஏற்படும்போது மகிழ்வு கொள்கிறான். துன்பமும் கஷ்டமும் சூழ்ந்து கொள்ளும்போது ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்கின்றான். எந்நிலையிலும் அல்லாஹ்வை நினைப்போர் மிகக் குறைவே. அதுவும் இக்காலத்தில் இலட்சத்தில் ஒருவர் என்று கூட சொல்ல முடியாத நிலை. ‘ஆகவே, மனிதனை அவனுடைய இறைவன் சோதித்து அவனுக்கு அருள் புரிந்து அவனை மேன்மையாக்கினால், என்னுடைய இறைவன் என்னை மகிமைப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகின்றான். ஆயினும் (இறைவன்) அவனை சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்து […]

Read More

தலைமை

பெளர்ணமி வெளிச்சத்தில் விண்ணை நோக்கி நீண்டு நின்ற இரண்டு வெள்ளை நிற மினராக்களும் கர்வம் கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது. பள்ளிவாசலின் வெளிவராண்டாவை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரத்தின் கீற்றுகள் மெல்லிய காற்றினூடே தங்களின்  இறுப்பை அவ்வப்போது நிறுவிக்கொண்டு இருந்தன. பகலில் அடித்த வெயிலின் தாக்கம் லேசாக வராண்டாவில் மிச்சமிருந்தாலும் பேச்சுக்களில் வெளிப்பட்ட அனலால் அது பொருட்படுத்தப்படவில்லை அவர்களால். அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்துகொண்டிருந்தது நீள்வட்டமாக அமர்ந்திருந்த இளைஞர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம். “முன்னூறு தலகட்டுக்கும் மேல […]

Read More

புதிய அரங்கேற்றம் ! -அத்தாவுல்லாஹ், துபை

மக்கம் – இபுராஹிம் நபிகள் இஸ்மாயில் நபிகளின் பிரார்த்தனை தேசம் – அங்கே பிறந்ததுதான் நமது ஈருலகங்களுக்குமான இரட்சிப்பு சுவாசம் ! கஅபா – உலக முஸ்லிம்களின் கவுரவ கம்பீரம் – உலகின் அனைத்து நபிமார்களும் நின்று வணங்கிய இறை வாசஸ்தலம் ! அன்னை ஹாஜரா ஏழுமுறை ஓடித்தேடிய குழந்தையின் தாகம் இங்குதான் புனித ஜம் ஜம்மாய் சுரந்தது ! ஹஜ்ஜூக்கு வந்து – தங்கள் அழுக்குப் பாவங்களை அகற்றுபவர்கள் புனித மழலைகளாகப் பிறக்கிறார்கள் ! பிள்ளைகளுக்குப் […]

Read More

மரணப் படுக்கையில் மகனுக்கு உபதேசம்

சுல்தான் கியாஸுத்தீன் முதுமையின் சுமையால் உயிரோடு போராடிக்கொண்டிருந்தார். எனவே கொள்ளையர்களை விரட்டியடிக்கச் சென்றிருந்த அவருடைய மகன் இளவரசர் முகம்மதை சற்றே விரைந்து திரும்புமாறு அவசரச் செய்தியை அனுப்பினார். அவ்வாறே திரும்பிய மகனிடம் தனிப்பட்ட முறையில் தன் இறுதி உபதேசத்தை இதயம் கசிய எடுத்துரைத்தார். “நீண்ட நெடிய அனுபவம் பெற்ற என்னுடைய சொற்களைக் கவனமாய்க் கேள். அவை உனக்குப் பெரிதும் பயன்படும். நீ அரியணை ஏறும்போது உன்னை அல்லாஹ்வின் பிரதிநிதி என்று உணர்வாயாக. நீ ஏற்கப் போகும் பொறுப்பு […]

Read More