வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)
வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா விண்ணிறங்கி வருகின்றாய் ? எங்கள் ஆன்மத் தங்கத்தை புடம்போட வருகின்ற புனித ரமழானே ! வா ! வா ! காபாவைச் சுற்றிவந்து கைக்குழந்தை ஆகின்றோம் ! ஆனாலும் இங்கே பொய்க்குழந்தையாகவே பொழுதைக் கழிக்கின்றோம் ! அந்தப் பாவத் துருவையும் கூட சுட்டெரிக்கும் உன் நெருப்பில் சாம்பலாக்கி விடுகின்றாய் […]
Read More