திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு முனைவர் பட்டம்

ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளருக்கு அமெரிக்கா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி 1951 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 61 ஆண்டுகள் உயர்கல்விச் சேவையை வழங்கி வருகிறது.  தன்னாட்சி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அங்கிகாரம் பெற்ற இக்கல்லூரி, சென்ற ஆண்டு “ஆற்றல் வளத் தனித்தகுதி” (COLLEGE WITH POTENTIAL FOR EXCELLENCE) சான்றிதழ் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கிறது. பல்வேறுபட்ட இளங்கலை, முதுகலை மற்றும் உயர்கல்வி ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி வரும் இக்கல்லூரியில், சுமார் […]

Read More

புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ

விண்ணும் மண்ணும் விதி கடலும் வானும் கதிரும் விண்மீனும் பொன்னும் பொருளும் வான்முகிலும் பச்சை மரமும் இலை கொடியும் எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனை என்றும் புகழும் என்னிறைவா ! உனக்கே என்புகழும் புகழ்ச்சியும் சாற்றுகிறேன் ! எல்லாப் புகழும் இறைவனுக்கே அன்பார்ந்த சகோதரர்களே ! அருமைமிகு சகோதரிகளே ! பண்பான பெரியோர்களே ! பெருமை மிகு நேயர்களே ! தத்துவப் பெட்டகமான கண்ணிய மிக்க மாதம் புனித ரமளானின் புண்ணியங்களைத் தேடிக் கொண்டிருக்கும் தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் […]

Read More

வஃபாத்து செய்தி

சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் பீர் மற்றும் முதுகுளத்தூரைச் சேர்ந்த காதர்பாத்து, பத்ருன்னிஷா               ( க/பெ. முஹம்மது உசேன், ஆசிரியர்), ரசூல் ஆகியோரின் தாயார் நேற்று 20.07.2012 வெள்ளிக்கிழமை  முதுகுளத்தூரில் வஃபாத்தானார். இவர் துபாயில் பணிபுரிந்து வரும் சாதிக், சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் அப்துல்லா, நூர் முஹம்மது, அப்துல் காதர், சல்மான் ஆகியோரின் நன்னியாவார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட […]

Read More

இட்டு வாழும் இலக்கணத்தை நட்டு வைத்தது ரமளான் (முதுவைக் கவிஞர், ஹாஜி உமர் ஜஹ்பர் )

கோடான கோடி ஜீவ இனத்திலே குறிப்பிட்டுச் சொல்லும் மனிதப் பிறப்பாக இறைவன் நம்மைப் படைத்திருக்கிறான் ! அல்ஹம்துலில்லாஹ் ! இதற்காக இறைவனை எப்படிப் போற்றிப் புகழ்ந்தாலும் அது ஈடாகாது ! இந்த மனித இனம் வறுமையிலும், செழுமையிலும் உழன்று நின்று- சிலர் குளுமையிலும் சிலர் கொடுமையிலும் குடித்தனம் நடத்துவதை அன்றாட மனித வாழ்வில் கண் கூடாகக் காணுகிறோம் ! எல்லா மனிதரின் வாழ்வும் ஒன்றுபோல் அமைந்ததில்லை செல்வம் படைத்தவர்கள் சந்தோஷத்தில் வாழுகிறார்கள் ! செல்வம் இல்லாதவர்கள் சஞ்சலத்தில் […]

Read More

தர்மத்தின் தலை வாசல் நோன்பு ( முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )

எத்தனையோ மாதங்கள் எழிலாய் பூத்தும் இனிதான ரமளானைக் கொடையாய் தந்து – தத்துவங்கள் நிறைவான புனித நோன்பைத் தந்தவனே ! ரஹ்மானே அல்லாஹ் ! உனக்கே எல்லாப் புகழும் புகழ்ச்சியும் உண்டாகட்டும் ! புனித நோன்பின் புண்ணியங்களை இரவும் பகலும் மகிழ்வுடன் அனுபவித்து வரும் நோன்பாளிகளே ! கண்ணிய மிக்க ரமளானின் இரண்டாம் பகுதிக்கு வந்து விட்டோம் ! அல்ஹம்து லில்லாஹ் ! பசியினைப் பசிஅறியார் புரிந்து கொள்ளப் படைத்திட்ட புனித மாதமே ரமளான் மாதம் ! […]

Read More

தத்துவ ரமளான் ! (முதுவைக் கவிஞர் மௌலவி உமர் ஜஃபர் மன்பயீ)

எத்தனையோ மாதங்கள் வருடத்தில் வந்தாலும், இனிதான மாதமென ரமளானைத் தந்தவனே ! எத்தனையோ வேதங்கள் உலகத்தில் உதித்தாலும், எளிதான போதமென குர்ஆனை உதிர்த்தவனே ! எத்தனையோ வணக்கங்கள் அடியார்க்கு விதித்தாலும், ஏற்றமிகு நோன்பதனை ‘முடியாக’ வைத்தவனே ! உத்தமனே ! சத்தியனே ! உலகாளும் ரட்சகனே ! உரைக்கின்ற புகழெல்லாம் உனக்காகும் இறையவனே ! தத்துவத்தைத் தரணியிலே தரம்பிரித்துப் பார்க்கையிலே தனித்திருந்து விழித்திருந்து பசித்திருந்து வாழுவதை உத்தமர்கள் போற்றுகிறார் ! புகழுகிறார் ! பாடுகிறார் !! உலகமெலாம் […]

Read More

கால்பந்தில் மின்சாரம்

அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., கால்பந்தில் மின்சாரம் பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர் எதிர் கட்சியையும் மாறி மாறிக் குறை கூறினாலும் அவதிப்படுவது என்னவோ மக்கள் மட்டும் தான். இதற்கான மாற்றுவழியைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை வெளிச்சமாக்க மண்ணெண்ணெய் விளக்குகளையே பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் அதிகம் […]

Read More

வறியோர்க்கு உதவிக்கரம் நீட்டுங்கள். ரமழான் புகட்டும் பாடமிது

அஷ்- ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத், இலங்கை புனித ரமழான் முஃமின்களுக்கு புகட்டி நிற்கும் பாடங்கள், படிப்பினைகள் அது வழங்கும் பயிற்சிகள் மிக மகத்தானவை. உண்மையில் முஃமின்கள் புனித நோன்பினால் அடையும் நன்மைகள் ஏராளம். நோன்பானது உடல் உள, ஆன்மிக ரீதியாகவும் முஃமின்களுக்கு பயன் அளிப்பதனை, பல் நன்மைகளை வழங்குவதனை காண்கின்றோம். புனித நோன்பு பசியின் கொடுமையை, வறுமையின் வன்மையை ஒவ்வொருவருக்கும் மானசீகமாக, செயல்முறையில் உணர்த்தி நிற்கும் பாங்கு எவ்வளவு அற்புதமானது? பசியின் ருசியை அறியாது தாகத்தின் […]

Read More

சிறகு

சிறகு விவரம் இன்றைய நாளில் ஊடகங்கள் தமிழகத்தில் பல்கி பெருகி விட்டன, பல்வேறு வடிவங்களில் அவை மக்களை அடைகின்றன. ஆனாலும் தமிழர் சமுதாயத்தை ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் களத்தில் நின்று, பணியாற்ற வேண்டிய ஊடகங்களின்  தேவை அதிகமாகவே உள்ளது. உண்மைகள் தலைதூக்கவும், நீதி நிலைபெறவும், நியாயங்கள் கிடைக்கவும், ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல்வேறு நேரங்களில் சமூக பிரச்னைகள் சரியான முறையில் ஆய்வு செய்து தீர்வுகளை மக்கள் முன் வைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மக்களின் […]

Read More

கணியம்

அறிமுகம் இலக்குகள் கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில் விவரங்களை வழங்குவது. அச்சு வடிவிலும், புத்தகங்களாகவும், வட்டுக்களாகவும் விவரங்களை வெளியிடுவது. பங்களிக்க விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம். கட்டற்ற கணிநுட்பம் சார்ந்த விஷயமாக இருத்தல் வேண்டும். பங்களிக்கத் தொடங்கும் […]

Read More