ஜுலை 27, துபாயில் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடக்க இருப்பதாக தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் ஜமாஅத் அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்விடம் மற்றும் பிற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 050 6944 128 /  050 464 39 77

Read More

வானொலி உரை

மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு அகிலத்தை ஆளுகின்ற வல்லவனே அல்லாஹ் ! உன்பெயர் தொட்டு இவ்வுரையைத் துவங்குகிறேன் ! பேரன்பு கொண்ட சகோதர சகோதரிகளே ! (வானொளி ஆறின் அன்பு நெஞ்சங்களே!!) கருணைக் கடலான காவலன் அல்லாஹ்வின் சிறப்பு மிகு சாந்தியும் சீர்மிகு சமாதானமும் நம் அனைவர்மீதும் நின்றிலங்கப் பிரார்த்திக்கிறேன் ! புனிதமும் புண்ணியமும் […]

Read More

விரதத்தின் நாட்கள் !

ஒரு மாதம் விரதத்தின் நாட்கள் ! வீணான எண்ணங்கள் விலங்கிடப் படட்டும் ! விரும்பத்தகாத வார்த்தைகள் விரட்டியடிக்கப் படட்டும் ! கருணையும், சாந்தியும் கஸ்தூரியாய் வாசம் வீசட்டும் ! பொறுமையும், அன்பும் பிறர்மீதும் பரவட்டும் ! வறுமையின் கோரம் வறியவர் மட்டுமன்றி வசதி படைத்தவரும் அறிய வரையறுப்பதுதான் நோன்பு ! அதை நேராய்க் கொள்வோம் ! நேர்மையின் வேராய்க் கொள்வோம் ! வசந்தம் நம் அனைவர் வாழ்விலும் சுகந்தமாய் வரவட்டும் ! அன்புடன் மு. பஷீர் பஷீர் […]

Read More

கத்தார் முதுவை ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி

கத்தார் : கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகர்கள் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சி ஃபக்ருதீன் அலி அஹமது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மௌலவி சீனி நைனார், அமீன், ஷரீஃப், ஹிதாயத்துல்லா, அனஸ், எஸ்.என். ஃபக்ருதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். For More Photos : http://www.facebook.com/media/set/?set=a.1306904991855.47612.1207444085&type=1&l=4c04c48ee7 தகவல் உதவி : A. Fakhrudeen Ali Ahamed, Deputy Project Manager TKEQ-NDIA Project P.O.Box 47405, Doha,Qatar. +974 66738227

Read More

குவைத்தில் காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுக்குழுக் கூட்ட‌ம்

குவைத் : குவைத்தில் காயிதெமில்ல‌த் பேர‌வை பொதுக்குழுக் கூட்ட‌ம் 13.07.2012 வெள்ளிக்கிழ‌மை மாலை குவைத் சிட்டி மிர்காஃப் ம‌ன்னு ச‌ல்வா உண‌வ‌க்த்தில் சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து. துவ‌க்க‌மாக‌ பி.முட்லூர் எஸ்.ஏ. ஷேக் அப்துல் காத‌ர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். முஹ‌ம்ம‌து ப‌ந்த‌ர் ஆர். முஹ‌ம்ம‌து ஃபாரூக் த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் முஸ்லிம் லீக் ஆற்றி வ‌ரும் ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார். கௌர‌வ‌த்த‌லைவ‌ர் திருப்ப‌த்தூர் டாக்ட‌ர் அன்வ‌ர் பாட்சா, துணைப் பொதுச்செய‌லாள‌ர் சென்னை எம். ஷாஹின்சா, பொருளாள‌ர் காரைக்கால் […]

Read More

இளநீர் கடற்பாசி

தேவையான பொருட்கள் க‌ட‌ற் பாசி – ஒரு பிடி தண்ணீர் அரை கப் இள‌நீர் – ஒன்று ச‌ர்க்க‌ரை – ஒன்றரை டே.ஸ்பூண் முந்திரி ‍பருப்பு கொஞ்சம் அரை கப் த‌ண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும். அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும். நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை தூவி ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து தேவையான சைஸில் துண்டுகளாகவெட்டி பரிமாறவும். இளநீருடன், அதன் வழுக்கை எனும் இளந்தேங்காயையும் சிறு […]

Read More

முப்பசி வென்ற முஸ்லிம்கள்

மௌலவி அல்ஹாஜ் முதுவைக் கவிஞர் ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ பசியினையே பசியறியார் புரிந்திடவே பசிக்காகப் படைத்திட்டான் ரமளானிதையே ! “பசித்திருப்பீர்” ஓர்திங்கள் முழுதும் எனக்கே ! பகல்மட்டும் இரவல்ல ! என்றானிறையே ! பசிக்காக உண்போர்கள் புவியில்கோடி ! பசியெனவே மாண்டோர்கள் புவியில்கோடி ! ருசிக்காகத் தின்போரும் உலகில்கோடி ! ரமளானை உணர்ந்தோரும் உலகில்கோடி ! கட்டியவள் கனிவுடனே காத்திருப்பாள் ! கணவனையே வழிநோக்கிப் பார்த்திருப்பாள் ! கட்டிலையும் கன்னியையும் ஒதுக்கிவைத்துக் காணிக்கை செய்திடுவான் காமத்தை […]

Read More

ஃபாரூக் உசேனுக்கு ஆண் குழந்தை

ஒத்தபேரன் சென்ட்ரல் M.அப்துல் ரகுமான்  மகன் A.பாரூக் உசேன் னுக்கு 20.07.2012 வெள்ளி கிழமை காலையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் உதவி : ஏ. ஃபாரூக் உசேன் farookhussain11@gmail.com

Read More

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

புது தில்லி, ஜூலை 22: நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மாவைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகள் ஆதரவில் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். இதில் பிரணாப் முகர்ஜி மொத்த மதிப்பில் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு சுமார் […]

Read More