ஆன்மாவின் உணவாக
……ஆகிவிட்ட ரமலானே
நோன்பும்தான் மருந்தாகி
…..நோய்முறிக்கும் ரமலானே!
பாரினிலே குர்ஆனைப்
….பாடமிட்ட ஹாபிழ்கள்,
காரிகளின் கிர்ஆத்கள்
…..காதுகளில் சொட்டுந்தேன்!
பகைவனான ஷைத்தானைப்
……பசியினாலே முறியடித்தாய்த்
தொகையுடனே வானோரைத்
…தொடரவும்தான் நெறியளித்தாய்!
இருளான ஆன்மாவை
…….இறைமறையின் ஒளியாலே
அருளான பாதைக்கு
….அழைத்திடுமுன் வழியாமே!
நண்பனாக மாற்றினாயே
…….நாங்களோதும் குர்ஆனை
நண்பனாகப் போற்றுகின்றோம்
…. நோன்பையும்தான் மாண்பாக
இம்மாதம் மறையோதி
….இரட்டிப்பு நன்மைகளை
இம்மைக்கும் மறுமைக்கும்
…இனிப்பாகத் தந்திடுமே
புடமிடும்நல் லுடற்பயிற்சிப்
….புதுச்சுவையும் பெருகிடவும்
திடமுடன்நாம் பெறுதலுக்குத்
……தினந்தொழுத தராவிஹூமே
—
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com