துபாய் : துபாயில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் நூல் வெளியீடு 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா பெங்களூர் எம்பயர் உணவகத்தில் நடைபெற்றது.
துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது.
நிகழ்விற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஹெச்.இப்னு சிக்கந்தர் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் ஜமாஅத்தின் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து இதுபோன்ற பணிகள் தொடர துஆச் செய்திட கேட்டுக் கொண்டார்.
பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கௌரவ ஆலோசகர் எஸ். சம்சுதீன் துவக்கவுரை நிகழ்த்தினார்.
மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் பி.கே.என். அப்துல் காதர் ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து விவரித்து நோன்பு திறப்பு துஆ ஓதினார்.
கௌரவ ஆலோசகர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் அவர்களது சேவைகளை நினைவு கூர்ந்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
புதிய உறுப்பினரான துபாய் வெல்கேர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் இஸ்மாயில், கனியின் தகப்பனார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இளையான்குடி கவிஞர் மு. சண்முகமாக இருந்து வஹியாய் வந்த வசந்தம் என்ற நூலின் காரணமாக கவிஞர் மு. ஹிதாயத்துல்லாவாகினார். அவரது நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற கலைராஜன் துபாயில் முதுகுளத்தூர் மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பது மிகுந்த மகிழ்வினை அளிப்பதாக தெரிவித்தார்.
பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் ஃபித்ரா மற்றும் இதர தகவல்கள் குறித்து விளக்கினார். துணைப் பொதுச்செயலாளர் ஹபீப் திவான் நன்றி கூறினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர் ஏ. அஹமது இம்தாதுல்லாஹ் தலைமையில் சாதிக், ஹபீப், கனி, ஜாஹிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
More Photos :
http://www.facebook.com/media/set/?set=a.4296440328370.180996.1207444085&type=1&l=09f904cc70