10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு
இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு
பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா
பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பரமக்குடி கல்வி மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா பரமக்குடி ராஜா திருமண மஹாலில் 07.07.2012 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகர் ஜனாப்.எஸ்.காசின் முகம்மது அவர்கள் தலைமை வகித்தார். இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகரும், ஓய்வு பெற்ற தலைமை பூச்சியல் வல்லுநருமான ஹாஜி.என்.ஜலீல் அவர்களும், இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகரும் பரமக்குடி கே.ஜே.கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் தாளாளருமான ஜனாப்.எம்.சாதிக்அலி அவர்களும், இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகரும் ஓய்வு பெற்ற வட்டாச்சியருமான ஹாஜி.என்.முஹம்மது சதக்கத்துல்லா அவர்களும், இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகர் ஹாஜி.எஸ்.சிகாபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவினை இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகரும், கீழப்பள்ளிவாசலின் பேஷ்இமாம் ஹாஜி.ஏ.எஸ்.ஜலாலுதீன் மன்பஈ அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி ஜனாப்.ஜெ.ஹிதாயத்துல்லா அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் மாநிலத் தலைவர் ஹாஜி.எஸ்.எம்.இதாயத்துல்லா அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மாணவ-மாணவியர்களை பாராட்டியும், பரிசுகள் வழங்கியும் சிறப்புரையாற்றினார். சித்தார்கோட்டை, முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட்காலத் தலைவர் ஜனாப்.எஸ்.தஸ்தகீர் அவர்கள் மற்றும் இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் முதல்வர் ஜனாப்.இ.ரஜப்தீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இராமநாதபுரம் மாவட்ட தமிழ்ச்சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜனாப்.எம்.அப்துல் சலாம் அவர்களும், இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கௌரவ ஆலோசகரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான ஹாஜி.டி.எம்.ஷேக்தாவூது அவர்களும், இராமநாதபுரம் தினத்தந்தி பத்திரிக்கையின் மூத்த பத்திரிக்கையாளர் ஜனாப்.எம்.எஸ்.அல்லாபக்ஸ் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட கல்வியாளரான ஜனாப்.எச்.கியூ.நஜ்முதீன் அவர்களும், நோட்டரி பப்ளிக் ஹாஜி.ஏ.கமால் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட முகவை முரசு பத்திரிக்கையின் ஆசிரியர் ஜனாப்.ஏ.ஜெ.ஆலம் அவர்களும் வாழ்த்துரை வழக்கி மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 இஸ்லாமிய மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிச்சீருடைகள் வழங்கப்பட்டது.
இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் டிரஸ்டி ஜனாப்.கே.அஸ்கர்அலி அறக்கட்டளையின் செயல்பாடுகளை வாசித்தார். இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் டிரஸ்டிகள் ஜனாப்.எச்.முஹம்மதுசபீக், ஜனாப்.எம்.செய்யதலி, ஜனாப்.ஆர்.முனவர்தீன், ஜனாப்.டபில்யூ.நூருல்அமின் ஆகியோர் மாணவ-மாணவியர்களின் பரிசுப்பட்டியலினை வாசித்தனர்.
இறுதியில் இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் டிரஸ்டி ஜனாப்.கே.ஏ.சாதிக்நஸ்ரத்கான் அவர்கள் நன்றி கூறினார். இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் கல்வி ஆலோசகர்
ஜனாப்.கே.ஏ.ஹிதாயத்துல்லா அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவில் 10 ஆம் வகுப்பில் 129 இஸ்லாமிய மாணவ-மாணவியர்களும், 12 ஆம் வகுப்பில் 34 இஸ்லாமிய மாணவ-மாணவியர்களும் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு சிறப்புச்செய்தனர். மேலும் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் ஜமாத்தார்களும், கல்வியாளர்களும், சமூதாய பெரியோர்களும், இளைஞர்களும் மற்றும் மாணவ-மாணவியர்களும் கலந்து கொண்டனர்.