துபாய்: துபாய் ஈமான் (இந்தியன் முஸ்லிம் அசோசியேஷன்) அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 24.06.2012 அன்று மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் இறைவசனங்களை ஓதினார். இணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, ரமலான் மாத செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக் குழு செயலாளர்கள் கீழை ஹமீது யாசின், காயல் யஹ்யா முஹ்யித்தீன், கல்விக்குழு செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.