துபாயில் நடைபெற்ற ’நிரித்யசமர்ப்பண் 2012’

தற்போதைய செய்திகள்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் ’நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சி 15.06.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

நிரித்யசமர்ப்பண் 2012’ இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சியினை துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், திருமதி அசோக்பாபு, சீதா சுரேஷ், திருமதி கீதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பிரசன்னா வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்திய கன்சல் அசோக் பாபு மற்றும் எம்.பி. சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நடன நிகழ்ச்சியின் மூலம் கலாச்சார தூதுவர்களாக செயல்பட்டு வரும் கவிதா பிரசன்னா குழுவினரைப் பாராட்டினர்.

நிரித்யசமர்ப்பண் 2012’ எனும் இந்திய பாரம்பர்ய நடன நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கவிதா பிரசன்னா திருச்சி கலைக்காவிரி, வாரணாசி உல்ளிட்ட இடங்களில் நடனம் பயின்றவர். நடன நிகழ்ச்சிகளுக்காக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், ஆஸ்திரியா, ஹாலந்து மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்.

ஷார்ஜாவில் நடன வகுப்புகளை நடத்தி வருபவர். ஒவ்வொரு வருடமும் தன்னிடம் பயின்று வரும் 150 மாணவியரது அரங்கேற்றத்தினை நிகழ்த்தி வருகிறார்.

நிகழ்வினை ஸ்ரீவித்யா சங்கரன், கீதா ஸ்வாமிநாதன், ஷீலா லக்‌ஷ்மண், பெட்டினா ஜேம்ஸ், பிரியா விஜய், யாமினி ஜெரோம் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினார்.

சாபில் ஃபெர்பியூம்ஸ், கிளாஸ் மெடிக்கல் செண்டர், அல் நபூதா இன்சூரன்ஸ் பிரோக்கர்ஸ், அஸ்டர் மெடிக்கல் செண்டர், சிவ்ஸ்டார் பவன் உணவகம், பிளாக் துலிப் பிளவர், டேஸ்டி இட்லி மிக்ஸ், எலைட் இண்டீரியர், ஸ்பீட் அட்வர்டைஸிங், பெருமாள் பூக்கடை, அல்ரவாபி ஜூஸ், அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *