அன்பின் தமிழ் நெஞ்சங்களே—இவருக்கு உதவலாமே!

தற்போதைய செய்திகள்

இவருக்கு உதவலாமே!

அன்பின் தமிழ் நெஞ்சங்களே,

ரியாத்தில் வேலைசெய்யும்பொழுது மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழரின் துயர்துடைக்கும் நோக்கில் இம்மடல் உங்களை வந்தடைகிறது.

மருத்துவ அறிக்கை

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த மெளலவி.ஹபீபுர் ரஹ்மான் தனது ஆலிம் படிப்பை மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக்கல்லூரியில் முடித்து விட்டு, ஏழ்மை குடும்பச் சூழ்நிலைக் காரணமாக, வேலைக்காக வேண்டி ரியாத் வந்து பணி செய்துக் கொண்டிருந்தார்.

லிப்ஃட்டில் செல்ல தேவைப்படும் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டீல் ரூம்(அறை) ஒன்றை இணைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கையில் லிப்ஃட் ரூமுக்கு மேல் சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையில், இணைப்பு வேலை நடந்துக் கொண்டிருந்த சம‌யம், க‌ட்டப்பட்டிருந்த கயிறு தீடீரென்று அறுந்து விட்டதால், மூன்றாம் தளத்திலிருந்து, அதனுடன் இணைக்கப்பட்ட ரோலர்வீலோடு, மிகவும் வேகமாக, நேரடியாக அந்த ஸ்டீல் ரூம் தரை தளத்தை மோதியது. இந்த கடும் அதிர்ச்சியின் எதிர்வினையால் (அதிர்ச்சியில் மேலே நோக்கி சென்ற ஒரு கணத்தில்), ரூமிற்கு மேலை உட்கார்ந்திருந்த‌ சகோதரரின் நடு முதுகெலும்பு பகுதியின், குமிழ் எலும்புகள் ஒன்றோடொன்று மோதி, பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டன.

அதன் விளைவாக, தலை முதல் வயிற்றுக்கு சற்று மேல்பகுதி வரை உணர்வுகளோடும், மறுபாதியான, அதற்கும் கீழே உணர்வுகளே இல்லாமலும் இருந்த நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கான அத்தியாவசிய அறுவை சிகிச்சை முடிந்தவுடன், ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியே அனுப்பி விட்டது.

முழு லிப்ஃட் பணி எடுத்த பெரிய கம்பெனி, “என் கம்பெனியில் வேலை செய்யவில்லை” என்று தட்டிக்கழித்து விட்ட பின்பு, அவர் வேலை பார்த்த கம்பெனியும், “சின்ன கம்பெனி, நாங்கள் என்ன செய்ய முடியும், முடிந்தவரை ஆயிரம் இரண்டாயிரம் தருகிறோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய‌ கான்ட்ராக்ட்க‌ள் எடுத்து ந‌ட‌த்தும் க‌ம்பெனியாத‌லால், எந்த‌ பெரிய‌ உத‌வியும் அவ‌ர்க‌ளிட‌மிருந்து கிடைக்க‌வில்லை.

கேர‌ளாவின் கோட்ட‌ய‌த்தில் உள்ள‌ ஒரு ஆஸ்ப‌த்திரியில் அவ‌ரை சேர்த்து, சிகிச்சை அளிக்க‌ அவ‌ரின் உற‌வின‌ர்களும், ந‌ண்ப‌ர்க‌ளும் முய‌ற்சி செய்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.

ரியாத் பத்தா – ஷிஃபா அல்‍ஜஜீரா ஆஸ்பத்திரி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில், ரியாத் சமுதாய சேவகர் ஷிஹாப் மற்றும் கேரள சமூக‌ சேவை அமைப்பின் உதவியுடன் ஒரு அறையில் தங்கியிருந்து, ஊருக்கு போகும் நாளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.

மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். அவ‌ர்க‌ளை திருமணத்திற்காக‌ க‌ரைசேர்க்கும், மிக‌ப்பெரிய‌ பொறுப்புட‌ன் வ‌ந்த‌ அவ‌ருக்கு நேர்ந்த‌ க‌தி, மிக‌வும் க‌வ‌லைப்ப‌ட‌க்கூடிய‌தாக‌ உள்ள‌து.

ஏழ்மையான அந்த சகோதரருக்கு, உத‌வ‌ வேண்டி ந‌ல்லுள்ள‌ம் ப‌டைத்த‌ உங்க‌ளிட‌ம் வேண்டுகோள் விடுக்கிறோம். விமான‌த்தில், ஸ்ட்ரெச்ச‌ர‌ர் வ‌ச‌தியுள்ள‌ சீட்டில் தான் அவ‌ர் த‌ற்போதுள்ள‌ நிலையில் ப‌ய‌ண‌ம் செய்ய‌ முடியும். ஏர் இந்தியா விமான‌த்தில், கொச்சினிற்கு நேர‌டியாக‌த் தான் ப‌ய‌ணித்து, கோட்ட‌ய‌ம் செல்ல‌ திட்ட‌மிட்டிருக்கிறார்க‌ள். இத‌ற்கு நிறைய‌ செல‌வு ஆகும்.

தங்களால் இயன்ற உதவியை imthias@imthias.com என்ற முகவரிக்கு அனுப்பினால், உங்களிடம் நேரடியாக வந்தோ அல்லது வங்கிமாறலோ பெற்று உரியவரிடம் சேர்ப்பித்து அவரின் உறுதிப்பத்திரம் பெற்று அனுப்புகிறோம்.

அவரின் புகைப்படம், வீடியோ மற்றும் மருத்துவ ரிப்போர்ட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

அன்புடன்,
இம்தியாஸ்
செயலாளர் : ரியாத் தமிழ்ச் சங்கம் மற்றும் சவூதி தமிழ்ச் சங்கம்
தலைவர் : தஃபர்ரஜ்
தொலைபேசி – 0540753261

May Allah accept all our good deeds,

The following the correct account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch

InshaAllah I shall handover the money to the concerns.

Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

—————————————-

HELP WANTED FROM KIND-HEARTED PEOPLE :

This letter is in regard to one of a Tamilian who was severely injured while working in Riyadh and is seeking all of our help.

Habibur Rahman from Melappalayam Tirunelveli District after completing his alim course from Usmaniyya arabic college , had to go to Riyadh to work and thereby support his family in poverty .

In his work , while he was trying to attach a built steel room onto the elevator , the rope that was tied with the rollerwheel , got cut , and fell right onto the steel room floor base and he was severely injured , his spine bones collapsed . . He wasn’t able to feel anything from below his ribs. He was taken to the hospital for first aid treatment …After a short treatment , the hospital administration sent him out.Don’t know why !

The company that was in charge of the entire lift project declined that Habirur Rahman worked for them and they cannot offer help. The sub-contract company that he worked for, gave only Saudi Riyals 1000 or 2000 and said they can’t do more. So his family and friends are trying to get him to a hospital in Kottayam in Kerala for further treatment. Meanwhile he is staying in a Riyadh baddha – aljazeera hospital room with the help of Br.Shihab and Kerala association

Br.Habib Rahman has three sisters. His family , being poor ,he took the responsibility of three sisters’ wedding and everything .Now he himself is in a very bad condition.

So please if you could help with anything ,Allah SWT will reward you immensely. His family is trying to fly him in Air India ( with wheel chair assistance because he cannot sit ) to Cochin and then to Kottayam. It is definitely going to cost a lot.

So whatever your help would be , send them to imthias@imthias.com. We’ll send them to concerned person as soon as possible.

Regards,
Imtiaz
Secretary
Riyadh and Saudi Tamil Sangam
Chairman: Taffaraj
Phone – 0540753261

May Allah accept all our good deeds, Kindly find below the bank details, you may transfer the bank below;

The following is the account details got from his father.

Name: Mohamed Sheikh Farook
Account Number: 1109101037051
Bank:Canara Bank, Melapalayam Branch

InshaAllah I shall handover the money to the concerns.
Best Regards,
Ahmed Imthias
imthias@imthias.com
+966540753261

Contact Person in India:
Mohamed Sheikh Farook : 0091-9952247585 (Patient’s father)
Account Number: 1109191937051,
Canara Bank, Melapalayam, Tirunelveli-627005
Tamil Nadu, INDIA.

டிஸ்கி:

அன்பின் நல்லுள்ளங்களே!

அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

பாதிக்கப்பட்ட ஒரு தமிழருக்கு வேண்டி உதவிகோரி மின்னஞ்சல் அனுப்பியதில் பல பகுதிகளிலிருந்தும் அனைவரும் தாராளமாக உதவி செய்ததில் இறைவனின் உதவியால் இதுவரை 13,900ம் ரியாலும் 25,000ம் ரூபாயும் வசூலாகியுள்ளது.

இன்னும் சிலர் எனது வங்கிகணக்கிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

அவரை இந்தியாவிற்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள்:-

· அவரை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்த தினத்தன்று ஏர்-இந்தியா விமானத்தின் வேலைநிறுத்தத்தால் அனுப்ப முடியாமல் போனது.

· சவூதியா விமானத்தில் பன்மடங்குத் தொகை கட்டவேண்டியிருந்ததால் ஆரம்பத்தில் யோசித்தாலும் பின்னர் வேறுவழியின்றி அனுப்பலாம் என நெருங்கி முயற்சி செய்தபொழுது இருக்கைகள் இல்லை. ஸ்டெச்சரில் வைத்து அனுப்ப குறைந்தது 4 இருக்கைகள் மேலும் அவருடன் ஒரு ஆள் செல்ல வேண்டிய நிர்பந்தம்.

· இருப்பினும் பல முயற்சிகள் இருக்கைகளுக்காக நடந்து கொண்டுள்ளது, கிடைத்துவிட்டால் இன்னும் சிலதினங்களில் நேரடியாக கேரளத்தில் உள்ள மருத்துவமனைக்கே அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது.

· அவரின் முதற்கட்ட மருத்துவ செலவிற்கு நீங்கள் செய்த உதவியில் ஒரு லெட்சம் ரூபாய்க்குண்டான காசோலையை அவருடன் அனுப்புகிறோம், மருத்துவம் தொடங்கியவுடன் பாக்கியுள்ள தொகையை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம், மெளலவி. ஹபீப்ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளின்படி அவருடைய தகப்பனாருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *