பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

தற்போதைய செய்திகள்

27/05/12 மாலை  பட்டுக்கோட்டை, ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளிவாசலில் சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
1) மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு வழங்கும் சலுகைகள்,உதவிகள்,மானியங்கள் பற்றிய விபரம்.
2) ஏழை மாணவர்களுக்கு ரூ 8 இலட்சம் வரையிலான ஸ்காலர்ஷிப் உதவி பற்றிய விபரம்.
3) +2 மாணவர்களுக்கு இலவச டியுசன்களுக்கான ஆசிரியர் சம்பள உதவி பற்றிய விபரம்.
4) ஜக்காத்தின் மூலமாக பைத்துல்மால் துவங்கும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் ரூ10,0000/ ஊக்கத்தொகை வங்குதல் பற்றிய விபரம்.
5) வட்டியில்லா கடன் வழங்கும் பைத்துமால் விபரம். உள்ளிட்டவைகள் இந்த கருத்தரங்கத்தின் விவாத பொருளாக இருந்தது.
கருத்தரங்கின் முடிவில், பட்டுக்கோட்டையில் ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளியில் பைத்துல்மால் அமைக்கப்பட்டது!
விழாவில் கருத்துரையாற்றியவர்களின் படங்கள் கீழே;விழாவை பல் மருத்துவர் ஏ.முகம்மது இலியாஸ் தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார்.
ஹாஜி எஸ்.ஏம்.எஸ்.முஹம்மது அஸ்ஸம்
செயலர்.காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்கள்
ஹாஜி எஸ்.எம்.செய்யது அப்துல் காதர்(சீனா தானா)
தலைவர் ஈ.டி.ஏ.,டெக்னோ பார்க்,சென்னை
ஹாஜி எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ்
தலைவர்,இஸ்லாமிய இலக்கிய கழகம்,சென்னை
ஹாஜி எம்.எஸ்.தாஜூதீன்
தலைவர் தீன் எஸ்டேட், தாளாலர் இமாம் ஷாஃபி ஸ்கூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *