27/05/12 மாலை பட்டுக்கோட்டை, ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளிவாசலில் சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
1) மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு வழங்கும் சலுகைகள்,உதவிகள்,மானியங்கள் பற்றிய விபரம்.
2) ஏழை மாணவர்களுக்கு ரூ 8 இலட்சம் வரையிலான ஸ்காலர்ஷிப் உதவி பற்றிய விபரம்.
3) +2 மாணவர்களுக்கு இலவச டியுசன்களுக்கான ஆசிரியர் சம்பள உதவி பற்றிய விபரம்.
4) ஜக்காத்தின் மூலமாக பைத்துல்மால் துவங்கும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் ரூ10,0000/ ஊக்கத்தொகை வங்குதல் பற்றிய விபரம்.
5) வட்டியில்லா கடன் வழங்கும் பைத்துமால் விபரம். உள்ளிட்டவைகள் இந்த கருத்தரங்கத்தின் விவாத பொருளாக இருந்தது.
கருத்தரங்கின் முடிவில், பட்டுக்கோட்டையில் ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளியில் பைத்துல்மால் அமைக்கப்பட்டது!
விழாவில் கருத்துரையாற்றியவர்களின் படங்கள் கீழே;விழாவை பல் மருத்துவர் ஏ.முகம்மது இலியாஸ் தொகுத்து வழங்கி நன்றியுரையாற்றினார்.