துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் ‘மனிதவள மேம்பாடு’ குறித்த சிறப்புக் கருத்தரங்கினை 11.05.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் நடத்தியது.
கருத்தரங்கிற்கு துபாய் இஸ்லாமிய வங்கியின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜாபர் அலி தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துபாய் ஹோல்டிங் மனிதவள மேம்பாட்டுத்துறையின் முதுநிலை ஆலோசகர் பொன் முஹைதீன் பிச்சை மற்றும் அபுதாபி எண்ணெய் நிறுவன மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர் ரஃபீக் ஆகியோர் மனிதவளமேம்பாடு குறித்த உரை நிகழ்த்தினர். அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
எமிரேட்ஸ் விமான நிறுவன மனிதவளத்துறை அலுவலர் அப்துல் லத்தீஃப், அல் ஜாபர் குழும் நிதித்துறை மேலாளர் இசாக், தென்றல் கமால் உள்ளிட்ட பலர் கருத்துரைகளை வழங்கினர்.
திருச்சி ஜாபர் சித்தீக் நன்றியுரை நிகழ்த்தினார். முதுவை ஹிதாயத் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். நிகழ்வில் மனிதவளமேம்பாட்டில் ஆர்வமுடைய பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.