நூல் : தமிழ் – ஆங்கிலம் –அரபி உரைகளில்
அறஞ்செய விரும்பு
ஆசிரியர் : தமிழ்மாமணி. கவிஞர். ஹாஜி.
இ. முஹம்மது அலி
முதல் பதிப்பு : 2011
உரிமை : ஆசிரியருக்கே
முகப்பு ஓவியம் : K.S.அம்ஜத் மீரான் ராவுத்தர்
அச்சிட்டோர் : ஆனந்தி அச்சகம்,
தஞ்சாவூர் ரோடு, திருச்சி – 620008.
Ph: 0431 – 4544269
அச்சுப்புள்ளிகள் : 15
வெளியீடு : வாத்தியார் ஹாஜியா ஃபாத்திமா பீவி
& ஹாஜியா தஃகியா பேகம்
நினைவு கல்வி அறக்கட்டளை சார்பில்
ஃபாத்திமா பீவி பதிப்பகம்,
7A, இரண்டாம் தெரு, ஜெயநகர்
கருமண்டபம்,
திருச்சிராப்பள்ளி – 620001.
பக்கங்கள் : 72
விலை : 50/-
நூலாசிரியர்பற்றி …
அறுபத்து ஏழு வயதாகிய இவர் திருச்சி மாவட்டம் – மணப்பாறை வட்டம் – இளங்காக் குறிச்சியில் ஜனாப். இப்றாஹிம்ஷா மற்றும் ஹாஜியா. ஃபாத்திமா பீவி ஆகியோரின் மகனாகப் பிறந்தார். திருச்சி தொலைத்தொடர்புத் துறையில் ஒருங்கிணைப்பாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு பிள்ளைகள். மகன் மு.முஹம்மது மாலிக் இப்றாஹிம்; சவூதியின் தலைநகர் ரியாதில் பணிபுரிகிறார். மகள் மு.ஜெசிமா சுல்தானா ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.
இவர்.
கவிஞர்.
எழுத்தாளர்.
மேடைப் பேச்சாளர்.
சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்.
-எனப் பன்முகங்களைக் கொண்டவர்.
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் உரைகள் நிகழ்த்தியுள்ளார்.
தினமலர், தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மற்றும் மாலைமுரசு நாளிதழ்களில் – ராணி, குங்குமம் வார இதழ்களில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
1992 மற்றும் 1993 ஆகிய ஆண்டுகளில் திருச்சியின் சிறந்த சமூக ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
1994 – ஆம் ஆண்டு இந்திய அரசின் பிரதிநிதியாக ஹஜ் புனித யாத்திரையை மேற்கொண்டார். 2003 – ஆம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரையைத் தன் குடும்பத்தினருடன் மேற்கொண்டார்.
1998 – 99 ஆம் ஆண்டு தொலைத் தொடர்புத் துறையில் சிறந்த ஊழியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சஞ்சார் சாரதி என்னும் விருதினைப் பெற்றார்.
1999 – ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழக அகில உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆறாம் மாநாட்டில் இவருடைய விடியலுக்கு வழிகாட்டி எனும் கவிதை நூல், தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் மற்றும் அன்றைய ஆளுநர் ஃபாத்திமா பீவி ஆகியோரால் வெளியிடப்பட்டுச் சிறப்புப் பெற்றது. 2003 – ஆம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெறும்போது இவர் எழுதி வெளியிட்ட இப்படிக்கு… நான் எனும் நூல் மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டது.
2007 – ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக ஏழாம் மாநாட்டில் அறக்குரல் எனும் நூலை எழுதி வெளியிட்டார். 2008 – ஆம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மாண்புமிகு. உபயதுல்லா ஆகியோர் தமிழ்மாமணி எனும் சிறப்பு விருதினை அளித்து கெளரவித்தனர். அதே ஆண்டில் அனைத்துலக இஸ்லாமிய இலக்கியக் கழக – தமிழ் மாநில இரண்டாவது மாநாட்டில் சேவைச் செம்மல் எனும் விருதினைப் பெற்றுப் பாராட்டப்பட்டார்.
2009 – ஆம் ஆண்டு, தினத்தந்தி ஆன்மிகப் பகுதியில் தொடர்ந்து வெளியான நபிமார்கள் வரலாற்றை இறைவன் பேசுகின்றான் எனும் தலைப்பில் வெளியிட்டு பெருமை பெற்றார். இந்நூல் திருச்சி மாவட்ட ஆட்சியர் நலக்குழுவின் சார்பாக மூன்றாவது சிறந்த பரிசு நூலாகத் தேர்வு செய்யப்பட்டு அதற்காகப் பொற்கிழியும் பட்டயமும் வழங்கப்பட்டன. இவர் தினத்தந்தியில் ஆன்மிகப் பகுதியில் தற்பொழுதும் ஆக்கங்களைப் படைத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010 – ஆம் ஆண்டு கொழும்பு ஆலிம்ஷா அல்லாமா ஸய்யித் முஹம்மது (ரஹ்) அவர்களின் புனித வரலாறு எனும் வரலாற்று நூலை எழுதி ஜமால் முஹம்மது கல்லூரி அரங்கில் வெளியிட்டார். திருச்சி மாவட்ட பொதுநலப்பணி நிதிக்குழு மற்றும் முத்தமிழ்க் கலைப் பண்பாட்டு மையம் சார்பில் இந்நூலுக்கு 2010 – ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான சிறப்புப் பரிசும் படைப்பியல் பட்டையமும், பொற்கிழியும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் இளங்காக்குறிச்சி பள்ளிக்கூட முன்னாள் மாணவர்கள் சங்கத்தை நிறுவி, படித்தோம் – படிக்க வைப்போம் என்ற கொள்கையை மையமாக வைத்து அப்பகுதி ஏழை – எளிய மாணவ – மாணவியர் உயர்கல்வி பெறப் பணிகள் மேற்கொண்டுள்ளார்.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற்ற கல்லூரி வைர விழாவில் இலக்கிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
ஒளவைப் பாட்டியின் ஆத்திசூடியைத் தமிழ் தெளிவுரையோடு – ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அறபியிலும் தொகுத்து, மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் நகரில் 2011 – ஆம் ஆண்டு மே மாதம் 19 – ஆம் தேதியிலிருந்து 22 –ஆம் தேதி வரை நடைபெறும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் வெளியிடப்படுகிறது.
ஆசிரியர் தொடர்பு எண் :
0431 2480481
94431 06 786