காலக்கொடுமை

இலக்கியம் கவிதைகள் (All)
காலயில…
மண் சட்டியில சுண்டுன மீனாணம்
பழைய நீச்சோறு கொஞ்சம் உப்பு
நேத்து ஒறகூத்துன தயிறு
அதல சின்ன வெங்காயம் வெட்டிப்போட்டது
தொட்டுக்க கொத்தவர வத்த
இதெல்லாம் சாப்புட்டு
எவ்ளோ நாளாச்சு,

அட.. சுடு சோத்துல தண்ணிய ஊத்தி
புளிச்சட்டினி, பருப்புச்சட்டினீன்னு
அம்மில அரச்சத கையால வழிச்சு
கொழவிய குத்துக்க நிப்பாட்டி
அதுல உள்ளதயும் வழிச்செடுத்து
கிண்ணியில வச்சு
ஆஹா.. அந்த சுடு சோத்து சூடுக்கும்
சட்டினி மணத்துக்கும் அதுல
அரஞ்சும் அரயாம இருக்குற
வெஞ்காய இனிப்புக்கும்
சாண்சே இல்ல..!

ஆயிரந்தா ஹோட்டல்ல சாப்பிட்டாலும்
ஊட்ல பாட்டியம்மா
சுட்டுக்குடுத்தாங்களே
அந்த மெலீசு மொறுகலான தோச
கருவேப்பல மணக்க
தேங்கா பொட்டுக்கடல சட்டினி
அட போங்கயா..!

பாசத்தோட ருசிய கலந்து
நீ ஊட்ட சாப்புட்டது
மொதல்ல மனச நெறயும்
பின்னால வயுறும் நெறயும்

சாப்புட்ட அப்புறமும்
மனசுல நீ! நாக்குல ருசி!
அதெல்லாம் இப்பவும்
தொண்ட குழிக்குள்ள
தேங்கி கிடக்கு!

இன்னெக்கெல்லாம்
கடையில காசுகொடுத்து
எவனோ கடமைக்கி வக்கிறத
எதையோ பசிக்கா சாப்புட்டு வர்ரோம்
பழைய வாசணய மனசுல வச்சுகிட்டு!

என்னா செய்யறதும்மா
இதெல்லாம் காலக்கொடுமை!

http://jmbatcha.blogspot.com/2012/05/blog-post_18.html

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *