துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளையின் மே மாத நகைச்சுவை கூட்டம் 11-ந் தேதி மாலை 6 மணிக்கு அல் கிசைஸ் ஆப்பிள் சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்த நாவலர் கௌஸ் முகைதீன் கலந்து கொண்டு பேசுகையில் நகைச்சுவையின் அவசியத்தையும் அது எவ்வாறு நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அளிக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.சிறப்பு விருந்தினருக்கு சங்கத்தின் சார்பாக செயாளலர் கமலக்கண்ணன் மற்றும் பொருளாலர் சுல்தான் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்கள்.
மேலும் அமீரக நகைச்சுவை நாடகம் மற்றும் துணுக்கு எழுத்தாளர் காமேஸ்வரன், பாவைநியாஸ், அஹமது இபுராகிம், செல்வி. பவித்ரா, செல்வி.தஸ்னிம் மற்றும் மாஸ்டர் விஸ்வேஸ் ஆகியோர் தங்களின் நகைச்சுவை பேச்சால் அரங்கினை அதிர வைத்தார்கள்.
செல்வி.சௌம்யா பாடல்கள் பாடியும் மற்றும் சென்னை என்ஜினியரிங் மாணவர் முரளி மிமிக்ரி செய்தும் மகிழ்வித்தார்கள். .
கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் நகைச்சுவையால்
பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிவரும் சங்கத்தின் அமைப்பாளார் திரு. குணா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் சங்கத்தின் உபதலைவர் இத்ரீஸ், உதவி செயலாளர் கான் முகம்மது மற்றும் உதவி பொருளாளர் யூசுப் ஆகியோர் செய்திருந்தார்கள்