பட்டுக்கோட்டையில் நடந்த சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

27/05/12 மாலை  பட்டுக்கோட்டை, ஹாஜி காதிர் முகைதீன் வக்ப் பள்ளிவாசலில் சமூக பொருளாதார கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 1) மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு வழங்கும் சலுகைகள்,உதவிகள்,மானியங்கள் பற்றிய விபரம். 2) ஏழை மாணவர்களுக்கு ரூ 8 இலட்சம் வரையிலான ஸ்காலர்ஷிப் உதவி பற்றிய விபரம். 3) +2 மாணவர்களுக்கு இலவச டியுசன்களுக்கான ஆசிரியர் சம்பள உதவி பற்றிய விபரம். 4) ஜக்காத்தின் மூலமாக பைத்துல்மால் துவங்கும் ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் ரூ10,0000/ ஊக்கத்தொகை வங்குதல் பற்றிய விபரம். 5) […]

Read More

மனைவி

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229   மனைவி …! யாரவள் …? நம் உயிரின் நகல் ! நமக்கான … பகல் !   மனைவி ! நம் காரியங்களுக்கு மருந்து ! நம் கண்களுக்கு அவளே, எப்போதும் விருந்து !   மனைவியொரு… மந்திரி …! – அவள் மதிநுட்பம் வாய்ந்த ராஜ தந்திரி !   அடுப்படிக்கும் வீட்டு ஹாலுக்குமாய் ’ரன்’ எடுத்தே… களைத்துப் போகும், […]

Read More

மலேசியாவில் பணி புரியும் சேட்க்கு பெண் குழந்தை

முதுகுளத்தூர் சென்ட்ரல் மகன் சேட்க்கு இன்று  30.05.2012 புதன்கிழமை அதிகாலை பெண் குழந்தை பிறந்துள்ளது தகவல் உதவி : farook hussain farookhussain11@gmail.com

Read More

துபாயில் நடைபெற்ற மனிதவள மேம்பாடு குறித்த கருத்தரங்கு

துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் ‘மனிதவள மேம்பாடு’ குறித்த சிறப்புக் கருத்தரங்கினை 11.05.2012 வெள்ளிக்கிழமை மாலை துபாய் இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் நடத்தியது. கருத்தரங்கிற்கு துபாய் இஸ்லாமிய வங்கியின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜாபர் அலி தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஜமால் முஹைதீன் இறைவசனங்களை ஓதினார். கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். துபாய் ஹோல்டிங் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறையின் முதுநிலை ஆலோச‌க‌ர் பொன் முஹைதீன் பிச்சை  மற்றும் அபுதாபி எண்ணெய் நிறுவன மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர் ரஃபீக் ஆகியோர் மனிதவளமேம்பாடு குறித்த உரை நிகழ்த்தினர்.      அத‌னைத் தொட‌ர்ந்து கேள்வி ப‌தில் நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது. […]

Read More

மே 25, துபை ஈமான் அமைப்பு நடத்தும் அல்ஹம்துலில்லாஹ் நிகழ்ச்சி

துபை : துபை ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ் – IMAN ) அமைப்பு 25.05.2012 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 5 மணி முதல் 9 மணி வரை அல் கிஸஸ் லூலூ ஹைபர் மார்க்கெட் பின்புறம் அமைந்துள்ள கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியில் அல்ஹம்துலில்லாஹ் எனும் இஸ்லாமிய சிறப்பு ஒலி – ஒளி தொகுப்பு நிகழ்ச்சியினை நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியினை தஞ்சை ஜலாலுதீன் வடிவமைத்து […]

Read More

துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாய் ; துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 16.05.2012 புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளக்கில் நடைபெற்றது. துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. திருச்சி சையது ஹதீஸ் வாசித்தார். விருதுநகர் சையது ஹுசைன் தீனிசைப் பாடல் பாடினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய பேச்சாளர் திருப்பத்தூர் நாவலர் கௌஸ் முஹைதீன் இஸ்லாத்திற்காக பெண்களின் தியாக வரலாற்றை உருக்கமாக நினைவு கூர்ந்தார். முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் நிகழ்வினை […]

Read More

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியதவி

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் 20.05.2012 அன்று இடிதாக்கி உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தாசில்தார் ஒரு இலட்சம் உதவித்தொகையினை வழங்கினார். புகைப்படம் மற்றும் தகவல் உதவி : மணி டிஜிட்டல், முதுவை manidgst@gmail.com

Read More

வன்முறை தவிர்க்கும் வழிமுறைகள் – க.அருள்மொழி

வன்முறை! செய்திகளில் இந்தச் சொல்லைக் கேட்காத நாளே இல்லை. நாள்தோறும் ஏதேனும் ஒரு இடத்தில்… தவறு! அனேகமாக எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. தனி மனிதனாகவோ, குழுவாகவோ இச்செயல் நடந்துகொண்டே இருக்கிறது. தனி மனிதனுக்கோ ஒரு சமூகத்திற்கோ சட்டத்திற்குப் புறம்பாக, ஒழுக்க விதிகளுக்கு மாறாக நடந்துகொள்வதும் அதனால் மற்றவர்களின் அல்லது தன் சொந்த உடலுக்கோ, உடைமைக்கோ, உயிருக்கோ சிறிய அளவிலோ முழுமையாகவோ பாதிப்பு ஏற்படுமாயின் அந்தச் செயல் ‘வன்முறை’ என்றாகும். தமிழறிஞர் மா.நன்னன் அவர்கள் இதைப் பற்றிக் […]

Read More

துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம்

துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் ஆடவர் தினம் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை கிரீக் பூங்கா அரங்கில் சிறப்புற நடைபெற்றது. ஆடவர் தினத்திற்கு துபாய் தமிழ்ச் சங்க துணைத்தலைவரும், நிறுவனப் புரவலருமான ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் பிரசன்னா மற்றும் பொருளாளர் கீதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தினை – ஃபர்கான், வினேஷ், சஜிந்த், அர்ஜீன், விபிஷ், சிரிஷ் ஆகியோர் பாடினர். திருக்குறளை வசந்த் வாசித்தார். […]

Read More