பயணங்கள்

தந்தையின் விந்தும் கருவறை நோக்கித் தனிமையில் முதன்முதற் பயணம் முந்தவும் பின்னே இறையருள் கொண்டு முயற்சியால் வென்றதும் பயணம் பந்தென உருண்டு பக்குவத் திங்கள் பத்தினில் கருவறைப் பயணம் வந்திடும் தருணம் வந்ததும் நலமாய் வையகம் கண்டதும் பயணம் கருவறைப் பயண மிருந்ததை மறந்து கனவினில் மிதந்திடும் நீயும் ஒருமுறை எழும்பித் தீர்ப்பினைக் காணும் உறுதியை நம்பியே மரணம் வருவதும் பயணம்; அதுவரை உலகில் வாழ்வதும் நிலையிலாப் பயணம் பருவமும் மாறி வளர்சிதை மாற்றம் படிப்பினைக் கூறிடும் பயணம் மடியினில் சாய்ந்து […]

Read More

குழந்தை வளர்ப்பு: எட்டு சவால்கள்….எதிர்கொள்ளும் வழி!

நாச்சியாள், படம்: வீ.நாகமணி உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள். ‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யாஆகியோரிடம் முன் […]

Read More

TV – SMS: இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?

“விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு, மக்களின் வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார். இன்றளவும் இந்தத் தடை அமலில் இருக்கிறது.  ஆனால் மக்களின் “”ஆசை” என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு […]

Read More

ஃப்ரிட்ஜில கண்டதையும் வைக்காதீங்க ! கெட்டுப்போயிடும் !

சொன்னால் கேட்டாத்தானே! ஃப்ரிட்ஜில கண்டதையும் வைக்காதீங்க ! கெட்டுப்போயிடும் ! இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் என்பது அவசியமானதாகிவிட்டது. ஆனால் அதை பராமரிக்கும் விதம்தான் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. அன்றாட தேவைக் கான பால், காய்கறிகள் மற்றும் கூல்டிரிங்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாத்து குளிர்ச் சியைத் தந்து நம்மை மலர்ச்சி யடைய செய்யும் ஃப்ரிட்ஜ், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அத்தகைய பொருளை மாதக்கணக்கில், ஏன்… ஆண்டுக்கணக்கில்கூட பராமரிக்காமல் பலரும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Read More

துபாயில் ஸ்மைல் அமைப்பின் தமிழ்த் திருவிழா

துபாய் : துபாயில் ஸ்மைல் அமைப்பு ” LEARN A TAMIL – லேனா தமிழ்” எனும் தமிழ்த் திருவிழா 13.04.2012 வெள்ளிக்கிழமை மாலை கராமா செண்டர் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த் திருவிழாவிற்கு ஸ்மைல் அமைப்பின் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். குமுதம் மற்றும் கல்கண்டு இதழ்களின் துணை ஆசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், பன்னூலாசிரியர் கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, கலையன்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். […]

Read More

அறிவு ஒளி காட்டும் வழி

(தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்) காரைக்குடியில் பேராசிரியர் டாக்டர். அய்க்கண் அவர்கள் தலைமையில் புத்தகத்திருவிழா. சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு சோழன் பழனிச்சாமி அவர்கள் தொடங்கிவைக்க, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் திருமதி. கற்பகம் இளங்கோ அவர்கள் வாழ்த்துரைக்கத் தொடங்கியது. மிகச்சிறந்த அறிவு வேள்வியாகப் புத்தகத் திருவிழா தொடங்கியது. உலகமே உதறி எறிந்தாலும் நம்மை விட்டு விலகாத உறவு “புத்தகங்கள்” என்பதே உலகம் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்திருந்தது. நாம் புத்தகத்தை புரட்ட மறுத்தாலும் உலகத்தைப் புரட்டிய போட்ட […]

Read More

அபுதாபியில் ம‌த்திய‌ அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு

அபுதாபி : அபுதாபியில் இந்திய‌ தூத‌ர‌க‌த்தின் சார்பில் இந்திய‌ வெளியுற‌வுத்துறை அமைச்ச‌ர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வ‌ர‌வேற்பு நிக‌ழ்ச்சி 15.04.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை அபுதாபி ஹில்ட‌ன் ஹோட்ட‌லில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ தூத‌ர் எம்.கே. லோகேஷ் அமைச்ச‌ர் கிருஷ்ணாவை வ‌ர‌வேற்றார். அவ‌ர் த‌ன‌து உரையில் முத‌ல் அமைச்ச‌ர், க‌வ‌ர்னர் என‌ ப‌ல்வேறு பொறுப்புக‌ளை வ‌கித்த‌ எஸ்.எம். கிருஷ்ணா அவ‌ர்க‌ள் த‌ற்போது ம‌த்திய‌ அமைச்ச‌ராக‌ பரிம‌ணித்து வ‌ருகிறார் என்றார். இந்திய‌ ச‌மூக‌த்தின் சார்பில் அவ‌ருக்கு வ‌ர‌வேற்பு அளிப்ப‌தில் பெருமித‌ம் கொள்வ‌தாக‌ தெரிவித்தார். […]

Read More

உயர்த்தும் கரங்களை உதவும் கரங்களாகவும் மாற்றுவோம் !

மவ்லவீ ஹாஃபிழ் அ.சைய்யது அலீ மஸ்லஹி பாஜில் தேவ்பந்தீ ஒரு முஸ்லிமுக்கு தன்னைப் படைத்த அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. அதுபோல, ஒரு முஸ்லிமுக்கு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய உரிமைகளும், கடமைகளும் இருக்கின்றன. ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு ஆற்றவேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தார். ஆனால், பொது மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரிமைகளிலும், கடமைகளிலும் தொய்வை ஏற்படுத்தி, தொடராமல் விட்டு விட்டால் அவர் உண்மையில் பரிபூரண விசுவாசியாக முடியாது. […]

Read More

துபாயில் ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்ச்சி

துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வை ‘ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவினை 11.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌ட‌த்திய‌து. துவ‌க்க‌மாக‌ திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹைதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ர் ஏம்ப‌ல் த‌ஜ‌ம்முல் முஹ‌ம்ம‌து குறித்த‌ அறிமுகவுரையினை முதுவை ஹிதாய‌த் வ‌ழ‌ங்கினார். ந‌ம்பிக்கையும் ந‌ட‌ப்பும் எனும் த‌லைப்பில் ப‌ன்னூலாசிரிய‌ர் க‌விஞ‌ர் ஏம்ப‌ல் த‌ஜ‌ம்முல் முஹ‌ம்ம‌து உரை நிக‌ழ்த்தினார். ந‌ம்பிக்கையுடைய‌வ‌ர்க‌ளுக்கு இறைவ‌ன் எத்த‌கைய‌ உத‌விக‌ளை வ‌ழ‌ங்குகிறான் என்ப‌த‌னை […]

Read More

கணினி

இறைவனின் பேரருளால்……….. ———————————————————— கணினி ————– இறைவனின் வல்லமையை எச்சரிக்கும் கனினி, உள்ளங்கையில் உலகமே அடக்கம். அதனால் மனித ஆரோக்கியமே முடக்கம். மனிதனே ஆக்கினான் அதுவோ மனிதனையே ஆட்டுகிறது கனினி பணியாற்றல்-இனி மூளைக்கோ என்றும் விடுமுறை சிந்தனையில் பிறந்ததோ சிந்தனையை சிறை பிடித்தது நாட்டுக்கு நாடு குற்றச் சாட்டுகள் ரகசியங்கள் களவாடப் படுகிறதென்று ரகசியம் மட்டும் தானா? கனினியால் கன்னிகள் களவாடல் கண்ணியம் களவாடல் பிஞ்சுள்ளங்கள் களவாடல் வேண்டாத காதலுக்காய் தூண்டாத உள்ளத்தை தூண்டியே சிதைத்து தூரமாய் […]

Read More