குழந்தை எனும் கவிதை

உயிரும் மெய்யும் கலந்திருக்கும் உன் புன்னகை மொழி …! இசைக்கருவிகள் மழலை ஒலி முன்னே மண்டியிடுகின்றன! மலர்கள் இதழ்களை விரிக்கின்றன உன் சுவாசத்தை அவைகளின் வாசமாக்கி வசப்படுத்திக் கொள்ள..! அல்லும் பகலும் அழகூட்டும் உன் விழிகளால் விண்மீன்கள் வெட்கித்துத் தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..! கருவறையின் கதகதப்பை உன்னிடம் காற்றும் கடன் கேட்கும் விஞ்சும் பட்டு மேனியைக் கொஞ்சம் தொட்டுப் பார்க்கக் கெஞ்சும் மலர்த்தோட்ட்ம்! ப்ரசவத்தில் கதறினாள் உன் தாய் நீ பிறந்ததும் அவள்மீது பட்ட உன் பார்வையால் பட்டெனப் […]

Read More

சிங்கப்பூரில் தொழில் முனைப்பு கருத்தரங்கு

சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு சிங்கப்பூர் : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற ஞாயிற்றுக்கிழமை 22-04-2012 அன்று, காலை மணி 10 முதல் பிற்பகல் 1 மணி வரை, “சிங்கப்பூரில் சொந்தத்தொழில் துவங்குவது எப்படி?” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான இலவச தொழில் முனைப்பு கருத்தரங்கு ஒன்றை, பீட்டி சாலையில் அமைந்துள்ள சிண்டா தலைமையகம் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூர் இந்திய வர்த்தகத் தொழிற்சபையின் தலைவரும், வர்த்தக ஆலோசகரும் கணக்காய்வாளருமான […]

Read More

ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள்

நூல்: ஆண்-பெண் தொடர்பாடல் – சில இஸ்லாமிய சட்ட வரம்புகள் ஆசிரியர்: டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி பக்.56 விலை: ரூ.25 வெளியீடு: மெல்லினம், சென்னை. +91 9003280518 (சென்னை), +91 9003280536 (மதுரை) ஆண்-பெண் தொடர்பாடல் என்பது சமூக வாழ்வின் இயல்பானதொரு அம்சமாகும். இது தொடர்பிலான இஸ்லாமிய வழிகாட்டுதல் நடுநிலை கொண்டதாகவும் யதார்த்தமானதாகவும் அமைந்துள்ளது. எனினும், ஆண்-பெண் தொடர்பாடல் விடயத்தில் முஸ்லிம் சமூகத்தில் இன்று நிலவும் நிலைமையைக் காணும் ஒருவர், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மீது தேவையற்ற அதீதக் […]

Read More

இளமையே கேள் !

மவ்லவீ ஹெச். அப்துர் ரஹ்மான் பாகவி எம்.ஏ. ”அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் எங்கள் இறைவா ! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக ! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை சீர்திருத்தித் தருவாயாக ! என்று கூறினார்கள்”. அல்குர்ஆன் (18 :10) கி.பி.250ல் ரோம் நாட்டின் ஒரு பகுதியில் ஓரிறைக் கொள்கைபடி வாழ்வதற்கு சிலை வணங்கிகளை விட்டும் ஒதுங்கிய சில இளைஞர்களைப் பற்றி குகைவாசிகள் என இறைவன் அடையாளமிட்டுக் காட்டுகிறான். […]

Read More

தற்கொலை இஸ்லாத்தில் தடை

( மவ்லவீ ஹாஃபிழ் பி.இஸட். பரகத் அலீ பாஜில் பாகவி, சென்னை – 10 ) “இன்னும் உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிகக் கிருபையுடையோனாக இருக்கிறான்”. -அல்குர்ஆன் ( 4:29) தற்கொலை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு பெருங்குற்றமாகும். ஹள்ரத் வாஹிதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். “உங்களில் யாரும் யாரையும் கொலை செய்யாதீர்கள். உங்களில் உள்ளவரை கொலை செய்வது தன்னைத்தானே தற்கொலை செய்து கொள்வது போல்தான்”. ஹள்ரத் அம்ர் இப்னுல் ஆஸ் […]

Read More

மொழிகள் கற்றால்… வழிகள் பல…! —– தி.அனுப்ரியா

‘பல மொழிகள் அறிந்தவர்களுக்கு உலகமே ஒரு வீடு’ என்பார்கள். நிறைய மொழிகளைக் கற்றவர்கள், சர்வதேச அளவில் எங்கு வேண்டுமானாலும் வெற்றிகரமாக வலம் வர முடியும். அதிலும், வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர்களுக்கு வானமே எல்லை. பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வாய்ப்புகளும் அதிகம். வெளிநாட்டு மொழிகளைப் படித்த மாணவர்களுக்கு சுற்றுலாத் துறை, பொழுதுபோக்குத் துறை, ஊடகங்கள், மக்கள் தொடர்புத் துறை மட்டுமல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களிலும் தொண்டு நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. இதற்காகவே இன்றைய மாணவர்கள் […]

Read More

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் பாஜில் பாக‌வி ‘அனைத்து துறைக‌ளிலும் ஆன்மீக‌ம்’ எனும் த‌லைப்பில் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்தினார். இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த […]

Read More

குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையினர் புனித உம்ரா பயணம்

குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர். இப்பயணத்தில் இரண்டு பேருந்துகளில் 96 பேர் பங்கேற்றனர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள் புனித மதிநாவிலும் இருக்குமாறு தங்களது பயணத் திட்டத்தை அமைத்திருந்தனர். பத்ர் யுத்தம் நடந்த இடத்திற்கும் உம்ரா பயண குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜித்தா தமிழ்ச் சங்கத்திற்கு குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார […]

Read More

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தளர் நாஞ்சில் நாடன் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் இருவரையும் பாராட்டும் வகையில் இலக்கியக் கூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துபாய் கராமாவில் அமைந்துள்ள சிவ்ஸ்டார் பவனில் நடைபெற்ற […]

Read More

சிரிப்பு

சிரிச்சா போதும் சிங்காரம் பூக்கும் நகை சுவையாலே புன் மனதும் ஆரும். [சிரிச்சா போதும்] புணிதத்தின் தன்மையில் நகை சுவை வேண்டும், புரம் பேசிதானே நாம் நகைக்க வேண்டாம். மெய்யானதாக நகை சுவை வேண்டும், பொய்யான கூற்றை நாம் உறைக்க வேண்டாம். பினி போக்கும் மருந்தாம். முப்பதில் ஒரு நாள் கூடியே ஒன்றாய், தப்பது முறிய நாம் சிரிப்போம் நன்றாய். [சிரிச்சா போதும்] அறிவொளியும் கூடும் நகை சுவையாலே, அறியாமை நீங்கி புது பொழிவை காண்போம். சிநேகங்கள் […]

Read More