துபாய்: துபாயில் மனிதாபிமானப் பணிகளுக்கு உதவிடும் வகையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் கடந்த 27ம் தேதி காலை அட்லாண்டிஸ் ஹோட்டல் அருகே நடைபெற்றது.
இந்த ஓட்டம் 18 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 5,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் சிலர் சைக்கிகள்கள், செல்லப் பிராணிகளுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் நன்கொடையை அமீரகத்தில் புற்றுநோய் குறி்த்த ஆராய்ச்சி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட நிகோலா ஆண்டர்சன் கூறுகையில்,
எனது தந்தை பெருங்குடல் புற்றநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்தார். நான் அவருக்காக இந்த ஓட்டத்தில் கலந்துகொள்கிறேன். என் தந்தை நாங்கள் ஓடுவதைக் கண்டு பெருமைப்படுவார் என்று நம்புகிறேன். இந்த ஓட்டத்தின் மூலம் புற்றுநோய் ஆராய்ச்சிக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதன் நோக்கம் உன்னதமானது என்றார்.