இறைவனின் பேரருளால்………………………..
……………………………………………………………………………………….
கணவன்
……………….
பிள்ளையை சுமக்கின்ற
தாரத்தை தான் சுமப்பான்
இல்லையென்றுறைக்காது,
இருப்பதையெல்லாம்,
கொடுத்துயர்வான்.
அல்லவை விடுத்து,
தொல்லையை தாங்கி
காத்திடுவான் கணவன்.
அல்லும், பகலும்,
அயராதுழைப்பான்
நாட்டம், தேட்டத்தை
நல்லறத்தில் வைப்பான்.
நல்லதாய், வல்லதாய்,
தேடியே தந்தே,
நாளும் பொழுதும்.
காப்பவன் கணவன்.
உறவறிந்து ஒருமித்து,
வரவறிந்து செலவழிப்பான்.
பறிதவிக்கும் போதெல்லாம்,
பக்குவமாய் பாதுகாப்பான்.
எதிர் கால சந்ததிக்கும்,
ஏற்றமிகு வழி வகுப்பான்
பொருப்பினை சுமந்தே
போற்றும்படியாகிடுவான்.
தன் தேவை பின் தள்ளி,
தன்னோரை முன் வைத்து,
பெற்றோரை ஒரு கண்ணாய்,
மற்றோரை மறு கண்ணாய்,
அநீதங்கள் யாதுமின்றி,
நீதத்தின் மீசானாய்,
இமை மூட மறந்தாலும்,
தான் மூடி காத்திடுவான்.
அன்பிற்கினியவனாய்,
பண்பிற்குயர்ந்தவனாய்,
பாசம் மிகுந்தவனாய்,
நேசத்திற்குகந்தவனாய்,
நேர்த்திமிகு சிறந்தவனாய்
பாந்த பற்றுள்ளவனாய்,
தன் சுற்றாய் வேலியாகி
காத்திடுவான் கணவன்.
0554908382