குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையினர் அல் அமீன் உம்ரா சேவையினருடன் இணைந்து சவுதி அரேபியாவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டனர்.
இப்பயணத்தில் இரண்டு பேருந்துகளில் 96 பேர் பங்கேற்றனர். ஐந்து நாட்கள் புனித மக்காவிலும், மூன்று நாட்கள் புனித மதிநாவிலும் இருக்குமாறு தங்களது பயணத் திட்டத்தை அமைத்திருந்தனர். பத்ர் யுத்தம் நடந்த இடத்திற்கும் உம்ரா பயண குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜித்தா தமிழ்ச் சங்கத்திற்கு குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவையின் நிர்வாகிகள் துணைத்தலைவர் நாச்சிகுளம் டிவிஎஸ் அலாவுதீன் தலைமையில் சென்றனர்.
இரு அமைப்புகளின் நிர்வாகிகளும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, இரு தரப்பு உறவினை மேம்படுத்தவும், கலாச்சார பரிவர்த்தனை மெற்கொள்வதெனவும் முடிவு செய்தனர்.