இறைவனின் பேரருளால்………..
————————————————————
கணினி
————–
இறைவனின்
வல்லமையை
எச்சரிக்கும் கனினி,
உள்ளங்கையில்
உலகமே அடக்கம்.
அதனால்
மனித ஆரோக்கியமே
முடக்கம்.
மனிதனே ஆக்கினான்
அதுவோ
மனிதனையே ஆட்டுகிறது
கனினி பணியாற்றல்-இனி
மூளைக்கோ
என்றும் விடுமுறை
சிந்தனையில் பிறந்ததோ
சிந்தனையை சிறை பிடித்தது
நாட்டுக்கு நாடு
குற்றச் சாட்டுகள்
ரகசியங்கள்
களவாடப் படுகிறதென்று
ரகசியம் மட்டும் தானா?
கனினியால் கன்னிகள்
களவாடல்
கண்ணியம் களவாடல்
பிஞ்சுள்ளங்கள் களவாடல்
வேண்டாத காதலுக்காய்
தூண்டாத உள்ளத்தை
தூண்டியே சிதைத்து
தூரமாய் சென்றார் அன்று
தூரமாய் இருந்தே
கிட்ட உறவாடல் இன்று
ஆவதும் பெண்ணாலே
அழிவதும் பெண்ணாலே
இது பழ மொழி
ஆவதும் கனினியாலே
அழிவதும் கனினியாலே
இது புது மொழி
ஊடகத்தால் ஊழல்கள்
முறை கேடு மிரட்டல்கள்
உருட்டல்கள்
உருக்குழைத்தல்கள்
ஏமாற்றல் அபகரித்தல்
சிறபொடிந்து சீறழிவு
சீர் கேடே இதன் விளைவு
அறிவையும், பொருளையும்,
விலை கொடுத்து வாங்கிய
அழிவின் வித்தோ கனினி?