மாண்புமிகு ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
புது டெல்லி, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் உரை
என் தந்தை ஜனாப் அவல் பக்கீர் ஜெயினுலாபுதீன் சிறிய வயதில் ஒரு படிப்பினை கற்று தந்தார். நாடு விடுதலையடைந்த நாட்கள் ராமேஸ்வரம் பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து உறுப்பினராக வெற்றி பெற்ற தந்தையார், அதே நாளில் ராமேஸ்வரம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும் தேர்வு பெற்றார். 30,000 மக்கள் எண்ணிக்கையில் அமைந்த அழகிய தீவு ராமேஸ்வரம். மதம் சார்ந்து அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சாதி காரணமல்ல. நல்ல மனிதர். தரமான சிந்தனையாளர், நேர்மைவாதி, நியாயவிலைக்கடை மண்ணெண்ணை விளக்கு ஒளியில் பள்ளிப் பாடங்களை படித்துக் கொண்டிருந்தேன், மின் வசதியில்லை. உரத்தக் குரலில் வாசித்தேன். கதவு தட்டும் ஓசை கேட்டது. கதவு தாழிடும் வழக்கம் ராமேஸ்வரம் வட்டாரத்தில் இல்லை. வந்தவர் தந்தை குறித்து வினவினார்.
நமாஸ் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு சென்றுள்ளதாக பதிலளித்தேன். புதியவர் கேட்டார். உமது தந்தைக்கு ஏதோ பொருள் கொண்டு வந்திருக்கிறேன் இங்கே வைத்து விடட்டுமா? நான் உடனே என் அம்மாவை உரத்த குரலில் கூப்பிட்டேன். பொருளை வாங்கிக் கொள்ள அனுமதி வேண்டினேன். தொழுகையில் அம்மா ஈடுபட்டிருந்தார். பதில் வரவில்லை. கட்டில் மேல் வைத்துவிட்டு செல்லுமாறு கூறினேன். பாடத்தில் கவனம் செலுத்தினேன். தந்தை திரும்பி வந்தவர், கட்டில் மேல் வைக்கப்பட்ட பொருட்களை பார்த்து திடுக்கிட்டார். தாம்பூலம், விலையுயர்ந்த வேட்டி, அங்கவஸ்திரம், பழங்கள் இனிப்பு வகைகள் காட்சியளித்தன.
அன்பளிப்பு தந்தவரின் பெயர், முகவரியுடன் துண்டுச் சீட்டு, வீட்டில் நான் கடைக்குட்டி பையன். என் மீது தந்தையாருக்கு பெரும் வாஞ்சை. அவர் மீது எனக்கு அளவிடமுடியா பாசம். என்னை அடிக்க ஆரம்பித்தார். அவ்வளவு கோபப்பட்டு நான் பார்த்ததேயில்லை. நிலைகுலைந்து பேரதிர்ச்சிக்கு ஆளானார். கோபம் உச்சந்தலைக்கேறியது. அடிவலி தாங்க முடியாமல் அரற்றினேன் அழுதேன். சிறிது நேரம் கழித்து அம்மா, ஆறுதல் கூறினார். தோளை அன்புடன் தழுவி தந்தையார் கூறினார். பரிசுப் பொருட்களை வாங்கக்கூடாது. ஹதீஸ் சொற்களை ஆலோசனையாக நெகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
ஒரு மனிதரை அல்லாஹ் உயர் பொறுப்பில் அமர்த்துகிறான். தமக்கு வழங்கப்பட்ட உரிமையை விட கூடுதலாக அனுபவித்தால் சட்ட விரோத ஆதாயம். பாவம் ஆகுமானதல்ல. வெகுமதி பொருட்களுக்கு அலைவது தவறான வழக்கம். தீய பண்பாடு. பரிசு ஏதேனும் உள்நோக்கம், சுயநலத்தை சேர்த்துக் கொண்டு வழங்கப்படுகிறது. நச்சு உடலில் தீண்டும். பரவும். எழுபது வயதை கடந்தும் படிப்பினை மறக்கவில்லை. மனதில் நீங்கவில்லை. மனு சமிதி கூறுகிறது – பரிசுப் பொருட்கள் மனிதருக்குள்ளிருக்கும் ஆன்ம ஒளியை அழிக்கும்.
தகவல் : ஆ.மு. ரசூல் மொஹிதீன்
முஸ்லிம் முரசு – மார்ச் 2012 இதழிலிருந்து
முகவரி :
முரசு இல்லம்
எண் 49 கனகராய மலையப்பன் தெரு
ராஜா அண்ணாமலைபுரம்
( பட்டினப்பாக்கம் அருகில் )
சென்னை – 600 028
தொலைபேசி : 2495 1648
நிர்வாக ஆசிரியர் : ஆளூர் மும்தாஜ் ஜலால்
ஆசிரியர் ஏ. முஹம்மது தாஜுத்தீன் B.E.