துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்களின் வருடாந்திர கூட்டம் 23 மார்ச் வெள்ளிக்கிழமை அன்று முஷ்ரிப் பூங்காவில் இனிதே நடந்தேறியது.
சுமார் 200 க்கும் மேற்பட்ட ஜமாத்தினர் அவர்தம்குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை நெல்லுகுரிச்சான். முஹம்மது நாசர் தொகுத்து வழங்கினார். நெய்னாப்பிள்ளை. பரிது வரவேற்புரை நிகழ்த்தி வந்தவர்களை வரவேற்றார். ரப்பர் காசிம். நூருல் அமீன் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி தந்தார். அவர் தம் தலைமை உரையில் கூறும் போது கடந்த 1980 வருடம் முதல் துபாயில் வசிப்பதாகவும் இது போன்ற ஊர் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார். ரசூலுல்லாஹ் (ஸல்) வின் பெருமைகளை தன் உரையில் விவரித்தார்.
சிறப்பு பேச்சாளர், தேனி மாவட்டம் கோம்பை நகரின் மௌலவி. மீரான் கனி பிர்தௌசி பெருமானாரின் பண்புகள் என்ற தலைப்பில் ரசூலுல்லாஹ் (ஸல்) வின்சுன்னத்துகளை மிகவும் திறம்பட எடுத்துரைத்துரைத்தார். பெருமானாரின் சுன்னத்துகளை பேணுவதின் கடமையை திருக்குர்ஆன் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார். பெருமானாரின் சுன்னத்துகளை – நாம் தொழுகையின் முன்சுன்னத்து, பின் சுன்னத்து என்ற அளவில் தான் புரிந்து வைத்துள்ளோம் என்றும், சுன்னத்து என்பது பெருமானாரின் சொல் செயல் அங்கீகாரம் என்றும்,அவற்றை பின் பற்றாதவர் முஸ்லிம் அல்லதாதவர் என்றும் ஆதாரங்களுடன் உரைத்தார். எல்லாவற்றிக்கும் மேலாக, ஹதிஸ் இல்லாமல் குரானை விளங்க முடியாது என்றும், ஹதிஸை புறம் தள்ளுபவர்கள் குரானையும் புறம்தள்ளுபவர்கள் ஆவார்கள் என்றும், தற்சமயம் நமதூரில் களை எடுக்கப்பட்ட, ரசூலுல்லாஹ் (ஸல்) வையும்,ஹதிஸ்களையும் ஏற்காத “அஹ்லே குரான்” என்று தம்மை தாமே அழைத்துக் கொள்ளும் 19 கூட்டத்தினரை “முன்கீரூல் ஹதிஸ்” (ஹதிஸை ஏற்காதவர்கள்) என்று அழைப்பதுதான் சரியானது என்றும் இவர்கள் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தினார்.
ஜூம்மா தொழுகைக்குப் பின், மதிய உணவாக சுவையான பிரயாணி எல்லோருக்கும் வழங்கப் பட்டது. உணவிற்கு பின், இரண்டாவது பேச்சாளர், உணர்வாய் உன்னை என்றஇஸ்லாமிய ஆளுமை பயிற்சி வகுப்புகள் நடத்தும் (இவர் நமதூரில், 2008 வருடம் உணர்வாய் உன்னை நிகழ்ச்சியைNMK மகாலில் நடத்தினார். பெருவாரியான கல்லுரிமாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்), தஞ்சை. ஜலாலுதீன் ஷேக் அவர்கள், மிகவும் சுவாரசியமாக தன் பேச்சை துவங்கினார். இன்றைய சமுதாய நிகழ்வை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டினார். இறந்த காலத்தை நினைத்தால் நமக்கு வருத்தமாக இருக்கிறது, எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது, இவற்றின் நடுவே நாம் நிகழ் காலத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்று காலங்கள் குறித்து இவர் பேசியது எல்லோர் மனதையும் தொட்டது. இவர் தன்னுடைய பேச்சை வழக்கமான ஒருமேடை பேச்சாக அல்லாமல் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி போல் (inter active session) அமைத்து இருந்தது எல்லோரையும் கவர்ந்தது.
அடுத்து, இஸ்லாமிய பல் சுவை நிகழ்ச்சியை வாவணன். அகமது கபிர் நடத்தினார். அதில் வினாடி வினா,குறுக்கெழுத்து, ஒரு சொல் ஒரு பதில், சொல் தேடல் முதலிய நிகழ்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, சிறப்பு பேச்சாளர்கள் பேசிய விசயங்களில் இருந்தது ஒரு கேள்வி கேட்கப்படும் என்றும் அதற்கு சரியான பதில் தருபவருக்கு ஒரு cordless போன் பரிசாக தரப்படும் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது. (பரிசு அன்பளிப்பு கோலார்பட்டியான் KTKA தமிம் அன்சாரி) அந்த பரிசை கும்பகோணத்தில் இருந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமிபத்தில் இஸ்லாத்தை தழுவிய 22 வயது இளைஞர், கொடிசுத்தி. சதாம் உசேன் அறை நண்பர், அனஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். அவர் தாம் இஸ்லாத்தில் வந்தது எப்படி என்று விவரித்த போதும், அவரின் பெற்றோர்,உடன் பிறந்தோர் இஸ்லாத்திற்கு வரவேண்டும் என்று நம்மை அவர் பிரார்த்திக்க சொன்னபோது வந்திருந்த அனைவரின் நெஞ்சமும் நெகிழ்ந்து, கண்களில் கண்ணீர் கசிந்தது. இந்த இளைஞரின் செயல் வந்திருந்த விருந்தினர்களையும், பேச்சாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. முஸ்லிமாக பிறந்துவிட்ட நாம், நம்மை இஸ்லாத்திற்கு கொண்டுவந்த நம்முடையமூதாதையர்களுக்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டது.
துபாயில் 1978 வருடம் முதல் வசிக்கும் அம்பலம். AVNAபெரோஸ் கான் அவர்கள் பேசுகையில், இதுதான், தான் முதல் முதல் கலந்து கொள்ளும் இளையான்குடி கூட்டம் என்றும், அவரை கௌரவப் படுத்தியதற்கு நன்றிகளையும்தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்ச்சியினை மிகவும் நேர்த்தியாக நடத்த உதவிய அனைவருக்கும் சாலையூர். அப்துல் காதர் நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும், நிகழ்ச்சிக்குதேவையான பொருட்களை தந்து உதவும். நெய்னாப் பிள்ளை. அமானுல்லாஹ், வாகன வசதி தந்து உதவிய,சாலையூர். அபுதாகிர், பம்பரமாய் சுழன்று வேலைகள் செய்த,நெல்லுகுரிச்சான் நாசர், சல்லை. மைதீன், பைசல், ஜியா உத்தீன், பட்டாணி. கனி, மதி நைனா. காதர் சுல்தான்,அபுதாபி லாபிர், அல்குஸ் பிலால், சோனப்பூர் மோதினார். பதிவு ஜாமான், சுவையான உணவு ஏற்பாடு செய்த தக்கட்டை. SHM அக்பர் அலி, மற்றும் நிகழ்ச்சியை நடத்தி தந்த விழா குழு அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை துபாய் வாழ் இளையான்குடி சுற்றுப்புற ஜமாத்தார்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.