திருவாரூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் இல்ல மணவிழா

தற்போதைய செய்திகள்

இரு மனங்களை வாழ்த்துவோம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – திருவாரூர் மாவட்ட செயலாளர் K. முகைதீன் அடுமை அவர்களின், தீன்குலச்செல்வி M. சபுரா சுஹானா அவர்களுக்கும், ஒரத்தநாடு – புதூர் – ஜனாப் அக்ரி.மு.அக்பர் அலி B.sc., அவர்களின் தீன்குலச்செல்வர் சுஹைல் அலி M.B.A LONDON – U.K அவர்களுக்கும் நிக்காஹ் 1.4.12 ஞாயிற்றுக்கிழமை காலை 12.30 மணியளவில் முத்துப்பேட்டை – கொய்யா மஹால் திருமண அரங்கத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் – பேராசிரியர்.முனீருல் மில்லத் – ஹாஜி K.M காதர் மொகிதீன் M.A, Ex.M.P அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிக்காஹ் நிகழ்ச்சியின் முன்பாக காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை மழை நிகழ்வு நாகூர் E.M. ஜெக்கரியா – (இன்னிசை இளைய முரசு) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையினை அல்ஹாஜ் M.M ஜலாலுதீன் (இ.யூ.முஸ்லிம் லீக் – திருவாரூர் மாவட்ட தலைவர் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

வாழ்த்துரையினை, ஆலி ஜனாப் ஹாஜி M. அப்துல் ரஹ்மான் M.A.M.P அவர்கள் (காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர்) அவர்களும், ஆலி ஜனாப் ஹாஜி M.S.A ஷாஜஹான் (மாநில பொருளாளர் – இ.யூ.முஸ்லிம் லீக்) அவர்களும் ஆற்றினார்கள். நன்றியுரையினை ஆலி ஜனாப் K. முகைதீன் அடுமை – இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அவர்கள் நிகழ்த்தினார்கள்.

இ.யூ.முஸ்லிம் லீக் – திருவாரூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜனாபா. S. ரஹானா B.Sc., அவர்களும், இ.யூ.முஸ்லிம் லீக் – மாநில மகளிர் அணி அமைப்பாளர் பேராசிரியை M. தஸ்ரிஃப் ஜஹான் அவர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் மாநிலச் செயலாளர் காயல் மகபூப், திருப்பூர் சத்தார் – மாநிலச் செயலாளர், ஆடுதுறை A.M ஷாஜஹான் – மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட, ஒன்றிய, நகர, பிரைமரி நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

”பாரக்கல்லாஹூ லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்”

பொருள் : (அல்லாஹ், உமக்கு அருள்வளம் புரியட்டும், சுபிட்சம் பொழியட்டும். நன்மையில் உங்கள் இருவரையும் இணைக்கட்டும்)

மணமக்களை வாழ்த்தும் துஆவினை ஓதி நாம் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்தினை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்வோமாக..

அபு ஆஃப்ரின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *