அபுதாபியில் அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி

அபுதாபி : அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி மண்டலத்தின் சார்பில் அடையாள‌ அட்டை வ‌ழ‌ங்க‌ல் ம‌ற்றும் மெளலிது ஷரீப் நிக‌ழ்ச்சி ஆகிய‌ன‌ 04.03.2012 ஞாயிற்றுக்கிழ‌மை  மாலை நடைபெற்றது. அமீரக காயிதெமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,தாய்ச்சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் தங்களின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் […]

Read More

“இராமாயண சாயபு’ அல்ஹாஜ் தாவூத்ஷா!

கலைமாமணி எஸ்.எம்.உமர் கும்பகோணம்-நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. அந்தக் காலத்தில் அந்த ஊருக்கு “நறையூர்’ என்று பெயர். இவரை “நறையூர் தாவூத்ஷா’ என்றுதான் அழைப்பார்கள். நாச்சியார் கோயிலில் திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் “நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். இவரின் தமிழ் ஆசிரியர் ராமானுஜ ஆச்சாரியார். கல்லூரியில் இவருக்குத் தமிழ் ஆசிரியராக […]

Read More

தடை பல தகர்த்தோம்……..

-வெ.ஜீவகிரிதரன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பிரிவு செயல்ளாளர்)  1948 மார்ச் 10-ம் நாள் கண்ணியமிகு காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற தாய்ச்சபையை தொடங்கிய போது மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள், அதிர்ச்சி, ஆச்சரியம், மகிழ்ச்சி, வெறுப்பு என அனைத்து உணர்வுகளும் பிரதிபலித்தது. முஸ்லிம்களுக்கு என தனியாக ஒரு பகுதியை பிரித்துக்கொடுக்க வேண்டும் என கோரிய கட்சிதானே முஸ்லிம் லீக். பிரித்து கொடுத்த பின்னரும் இங்கே எதற்கு முஸ்லிம் […]

Read More

செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

செசல்ஸ் தீவு : செசல்ச் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான் ( வயது 31 ) மூன்றாம் இடம் பெற்றார். இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை பதுர் சுலைமான் 3 மணி நேரம் 48 நிமிடம் 12 வினாடியில் கடந்தார்.  

Read More

பூப் பூவாய்ப் பூத்திருக்கு பூவுலகில்….!!

படைத்தவன் படைத்த  பாமாலை  பாரெங்கும் பூத்திருக்கும்   பூஞ்சோலை கருப்பையின் கதகதப்பு  அன்னையின் அரவணைப்பு  அத்தனையும் வாடாத பூ மனைவியின் இதழ்  மலரும் சிரிப்பு  மாதுளையின் பூ  கன்னச் சிவப்பு கவரும் ரோசாப் பூ மழலையின் மாசிலாப் புன்சிரிப்பு மல்லிகைப் பூ நண்பனின் நட்பு  நாளும் பாதுகாப்பு அரிதாய்ப் பூக்கும்  குறிஞ்சிப் பூ உறவுகள் என்பது கதம்பப் பூ அத்தனைக்கும்  ஆணிவேர் அன்பு ஆனால், கல்லின் மீது  பூ வீசியவர்கள் முதன் முதலாய்  ஒரு பூவின் மீது […]

Read More

படிப்பில் வேண்டும் பிடிப்பு

மூச்சு விடுதல் மட்டு மன்று முயற்சி கூட மனிதமே பேச்சில் கூறு மனைத்தும் விடாமல் பேணிக் காத்தல் மனிதமே பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று பயிரும் வளர்தல் போலவும் காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும் கடின வுழைப்பு வெல்லுமே ஊதும் சங்கின் அறிவிப் பால்நம் உறக்கம் களையச் செய்யுமே ஓதும் உன்றன் படிப்பால் செல்வம் ஓங்கி வளரச் செய்யுமே தீதும் நன்றும் பகுத்து முடிவைத் தீர்க்க வுதவும் கல்வியே போது மென்ற நிறுத்தல் குறியைப் போட்டு விடாது […]

Read More

மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் ஜியாரத்

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: எவர் என்னுடைய மரணத்திற்குப் பிறகு என்னை ஜியாரத் செய்வாரோ, அவர் என்னுடைய வாழ்நாளில் என்னை ஜியாரத் செய்தவர் போலாவார்.                           – தப்ரானீ கண்ணியம் பொருந்திய நபி(ஸல்) அவர்கள் இருக்கும் மதீனா நகரம் புனிதமானது. மிகுந்த பணிவோடும், கண்ணீரோடும் உள்ளம் நெகிழ்ந்த நிலையில் அந்நகரில் பிரவேசிக்க வேண்டும். அதிகமாக ஸலவாத் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். மதீனாவாசிகளிடம் கனிவோடு பேச வேண்டும். மதீனாவில் பொருட்கள் ஏதேனும் வாங்கினால் பேரம் பேசாமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள […]

Read More

சொர்க்கபுரி அல்ல!

http://jmbatcha.blogspot.com/2012/03/blog-post.html இவன் தன் வீரிய எதிர்காலத்தை வீருகொண்டு அமைக்க முற்படுகையில் முளைக்கவே விடாமல் முழுவதுமாய் எண்ண விதைகளை அரபு நாட்டு ஆசையில்  அணைத்து விடுகிறார்கள்! பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்பே பாஸ்போர்ட் எடுக்கத் தூண்டி துள்ளித் திரியும் வயதிலேயே அரபுநாட்டை சொல்லிச் சொல்லி தூபமிட்டு அடிமைத்தன எண்ணத்தை கொடுமையாக புகுத்துகின்றனர்! ஏனோ என் சமுதாயம்  வெளிநாட்டு மோகத்தில்  வீணே வீழ்ந்து…!  உண்மை தெரியுமா.. உனக்காக உழைக்கிறான் உடலெல்லாம் வியர்க்கிறான் பாசத்தை நினைக்கிறான் பகலெல்லாம் உழல்கிறான்  பசியாலும் துடிக்கிறான் எங்கே […]

Read More

இதோ சுவையான சமையலுக்கான சில சொக்குபொடி:

  o தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.o தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.   o இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.o தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.   o ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு […]

Read More