துபாய் உலக நகைச்சுவையாளர் சங்க கூட்டத்தில் நகைச்சுவையால் அனைவரையும் கவர்ந்த சிறுவர்கள்
துபாய் : உலக நகைச்சுவையாளர் சங்க துபாய் கிளையின் மார்ச் மாத கூட்டம், அல் கிசைஸ் ஆப்பிள் இண்டெர்நேசனல் பள்ளியில் 16.03.2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்தவர்களை சங்கத்தின் தலைவர் எம். முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். விருதை கவிஞர். செய்யது ஹூசைன்நகைச்சுவையின் சிறப்பையும் உலக நகைச்சுவையாளர் சங்கத்தை வாழ்த்தியும் தான் இயற்றிய கவிதையை பாடலாக பாடினார்.
பேராசிரியர் இளங்கோ, கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளி முதல்வர் கலிஃபுல்லா, கே.என். சிவகுமார், சேஷாத்திரி, கபீர், நியாஸ் மற்றும் அஹமது ஆகியோர் தங்களின் நகைச்சுவை பேச்சால் அரங்கினை அதிர வைத்தார்கள்.
சிறுவர் சிறுமிகளும் ஜோக்குகளை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்து பெரியவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபித்தனர். சௌம்யா மற்றும் காதர் ஆகியோர் பாடல்களை பாடி வந்தவர்களை மகிழ்வித்தார்கள்.
கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் குணா தொகுத்து வழங்கினார்.
விழா முடிவில் வருகை தந்த அனைவருக்கும் சங்கத்தின் செயலாளர் கமலக்கண்ணன் நன்றி தெரிவித்து பேசினார்.
கூட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் இத்ரீஸ் மற்றும் சுல்தான் ஆகியோர் செய்திருந்தார்கள்.