அஜ்மான் : அஜ்மான் இமிக்ரேஷன் மற்றும் இப்ன் சினா மருத்துவ மையம் ஆகியவை இணைந்து அஜ்மான் இமிக்ரேஷன் அலுவலக வளாகத்தில் 12.03.2012 திங்கட்கிழமை முதல் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
இலவச மருத்துவ முகாமினை அஜ்மான் இமிக்ரேஷன் பொது மேலாளர் பிர்கேடியர் முஹம்மது அப்துல்லா அல்வான் துவக்கி வைத்தார். இமிரேஷன் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எம்மால் இயன்ற ஒரு சமுதாயப் பணி இம்மருத்துவ முகாம். பொதுமக்களது உடல் நலத்தில் எமக்கும் பங்குள்ளது என்பதனை நினைவுறுத்தும் வகையில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கேப்டன் சுல்தான் இஸ்மாயில் அல் ஜாபி, காலனல் டாக்டர் அஹமது அப்துல் ரஹ்மான் அல் நூஹ்மான், முஸப்பிஹ் கல்ஃபான் பின் கலிதா, இப்னு சினா மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் அப்துல் கஃபூர், பொது மேலாளர் ஷேக் முஹம்மது அலி உள்ளிட்டோர் துவக்க நிகழ்வில் பங்கேற்றனர்.
அஜ்மான் இமிக்ரேஷன் உயர் அலுவலர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
இம்மருத்துவ முகாம் மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெறும். இம்மருத்துவ முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.