(பீ. எம். கமால், கடையநல்லூர்)
ஐ நா சபையாக
ஆரம்பிக்கப்பட்ட நான்
பொய் நா சபையாகப்
போய்விட்டேன் இப்போது !
உலகத் தலைவர்களே !
வாருங்கள்; என்னிடத்தில்
உலகப் பயங்கரவாதி
உருவாக்கி வைத்திருக்கும்
கத்தரிக் கோல் எந்தன்
கைகளிலே உள்ளது !
முடிவெடுக்கும் இடமாக
முன்னாளில் நானிருந்தேன் !
இப்போதோ
முடிஎடுக்கும் சலூனாக
மாறிநான் போய்விட்டேன் !
என்
உச்சந்தலையில்
உட்கார்ந்து இருக்கின்ற
பெயர்ப் பலகை மாற்ற
பெரியோரே வாருங்கள் !
ஐ நா சலூன் என்று
போர்டை மாற்றப்
புறப்பட்டு வாருங்கள் !
என்
சமையல் அறையில்தான்
சமாதானப் புறா
சமைக்கப் படுகிறது !
அதன்
வறுவல் வாசம் தான்
உலகத்தில் ஆங்காங்கே
உபவாசம் கலைக்கிறது !
என் சமையலறையில்
தலைமைச் சமையல்காரர்
அண்ணாவி அமரிக்க
அடாவடிக் காரன்தான் !
நீங்கள்
பிரமிடுகளைப் பார்த்து
பிரமித்து இருப்பீர்கள் !
அவையெல்லாம்
காலாவதி ஆன
கல்லறை உண்டியல்கள் !
பாடம் செய்யப்பட்டு
பத்திரமாய் வைத்திருக்கும்
இறந்த மன்னர்களின்
இடுகாடு அதுவேதான் !
அதைவிடப் பெரிய
அழகான கல்லறை
உலகத்தில் நான்தான்
உங்களுக்குத் தெரியுமா ?
ஆமாம் –
சமாதானத்தின்
சமாதியே நான்தான் !
வெட்டியான் இங்கே
வேறு யாருமல்ல –
உலகக் கொலைகளுக்கு
ஒட்டுமொத்தக் குத்தகை
எடுத்து வைத்திருக்கும்
அண்ணன் அமரிக்கா தான் !
நான்
பிரமிடுகளைவிடப்
பெரிய சமாதி !
என்னிடம்
அடங்கிக் கிடப்பது
அகிலத்தின் சமாதானம் !
ஒருநாளில்
புறாக்களுக்குத்தான்
புகலிடம் என்னிடம் !
இப்போதோ
ராஜாளிகளுக்கு
நான்தான் அடைக்கலம் !
சாந்தி சமாதானம்
சரித்திரத்தில் வேண்டுமென்று
வேண்டிநிற்பவற்கு
விரோதியே அமரிக்காதான் !
அமரிக்காதான் எனக்கு
ஆஸ்தான முதலாளி !
அதன்
கண்ணசைவில்தான் என்
கால்களே நடக்கும் !
அது
ஒருவிரலை உயர்த்திவிட்டால்
நான்
ஒன்றுக்குப் போய்விடுவேன் !
அதன்
வீட்டோ விரலுக்கு
வீரியம் கூடுதல்தான் !
ஈராக் போரினிலிலே
எத்தனைபேர் செத்தார்கள்
அத்தனை பேர்களுக்கும்
என் கையிலிருந்த
வெள்ளைக் கொடிதான்
சவக்கோடி ஆனது !
என்னால் முடிந்தது
இதுமட்டு மேதான் !
போரை நிறுத்துதற்குப்
போக்கத்தவன் ஆனேன் !
வன்மையாய்க் கண்டிக்க
வக்கற்றுப் போனேன் !
தார்க் குச்சி என்னிடம்
தானிருந்த தென்றாலும்
போர்க்குற்ற வாளிகளை
போய்விடச் சொன்னவன் நான் !
புஷ்களையும் ஒபாமா
போன்றகொலை காரனையும்
இராஜபக்ஷே போன்ற
நரமாமிச நாய்களையும்
விட்டு வைத்திருக்கும்
விஷமியுமே நான்தான் !
புத்தன் ஏசுபிரான்
புனிதநபி நாயகத்தின்
போதனைகள் எல்லாமே
எத்தன் அமரிக்காவின்
இதயத்தில் ஏறாது !
அமரிக்க அரசியல்
சாசனமே குருதி
கொண்டு எழுதப்பட்ட
“குண்டு” வாசகங்கள்தான் !
என்மீது-
சமாதானச் சாறால்
ஒருபோதும் அபிஷேகம்
நடவாது; அமரிக்க
தேசீய மொழியான
குருதி மொழியில்தான்
குளித்தெழு கின்றேன்நான் !
என்
முற்றத்தில் வண்ணத்தில்
கைஅசைக்கும் பன்னாட்டுக்
கொடிஎல்லாம் அமரிக்கா
கக்கூசில் கைதுடைக்கும்
கைக்குட்டை தானோ ?
உலக மக்களின்
உயிர்ப்பலி பீடம் நான் !
வெட்டரிவாள் அமரிக்க
அதிபனின் கைகளிலே !
இஸ்ரேலுக் கெதிராக
என்னால் எந்த
மூச்சும்கூட விடமுடியவில்லை !
என்முதுகில்
ஏகாதிபத்தியம்
ஏறி மிதிப்பதினால் !
பலஸ்தீன முஸ்லிம்கள்
படுகின்ற பாடெண்ணி
என்தலை இப்போது
தாழ்ந் திருக்கின்றது !
எப்போது அமரிக்கா
தரைமட்ட மாகுமோ
அப்போது தானெனது
தலைநிமிரும் புன்னைகையில் !
உலக வரைபடத்தில்
உட்கார்ந்து இருக்கின்ற
அமரிக்கா இஸ்ரேல்
அழிந்து விடுமென்றால்
பூமியே இங்கு
புனிதம் அடைந்து விடும் !
சமாதானத்
தாயைக் கற்பழிக்கும்
தலைநகராம் அமரிக்கா
முஸ்லிம் மன்னர்களின்
மூன்றாவது கிப்லா !
மக்காவை நோக்கி
மக்களெல்லாம் நின்றுதொழ
முஸ்லிம்
மன்னர்கள்மட்டும்
வெள்ளை மாளிகைமுன்
விரிக்கின்றார் முசல்லாவை !
அதனால்தான்
பயங்கர வாதிஎன்ற
பட்டத்தை முஸ்லிம்கள்
காசுசெலவில்லாமல்
கைகளிலே வாங்குகின்றீர் !
நியாயத் தராசு
அமரிக்கக் குரங்கினிடம் !
ஐநா என்னிடம்
அப்பம் மட்டுமே !