திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு
வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும்
தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும்
ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும்
சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால்
மாய்ந்து படித்தும் மூளையில் படியாது
;
உண்ண வேண்டிய உணவு காய்கனி
திண்ணமாய்க் கிட்டும் தேர்வில் வெற்றிக்கனி
குளிக்கு முன்பு குளிர்நீரை வாய்க்குள்
ஒளித்துக் கொண்டால் உற்சாகம் வாய்க்கும்
முழுதாய் முன்னுறக்கம் மூளைக்கு ஓய்வு
பழுதிலாத் தெம்பாம் படித்தவர் ஆய்வு
எழுதிப் பார்த்தால் எட்டும் அளவு
வழுத்திச் சொல்வர் வென்றோர் பலரும்
தொடர்ந்து படித்தால் தொடங்கும் சோர்வு
இடையில் வேண்டும் இனிய ஓய்வு;
நடந்தத் தேர்வை நினைவில் அழித்தால்
நடக்கும் தேர்வில் நலமே செழிக்கும்
கடந்ததை எண்ணினால் காலமே வீணாகும்
நடப்பதை எண்ணினால் நாளை உனதாகும்
தொழுகை தியானம் தருமே புத்துணர்வு
அழகிய உடற்பயிற்சி அஃதென உணர்க!
ஆக்கம்: அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல் காதிர்)
(”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் (பாடசாலை) அபுதபி (தொழிற்சாலை) எனது வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com shaickkalam@yahoo.com kalaamkathir7@gmail.com ”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை) அபுதபி(தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499